டெல்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து 5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 35 ஆயிரம் கோடி) ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நடந்த 11வது ராணுவ கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இதை பிரதமர் நரேந்திர மோடி கடந்த புதன் கிழமையன்று தொடங்கி வைத்த நிலையில், அடுத்து வரும் பிப்ரவரி 9ம் தேதி வரை 5 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகின்றது.
முதலீடு செய்ய அழைப்பு
இந்த கண்காட்சியில் சுமார் 70 நாடுகளை சேர்ந்த 172 வெளிநாட்டு நிறுவனங்கள் ,மற்றும் இந்தியாவை சேர்ந்த பல நூறு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. இந்த கண்காட்சியில் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தனியார் நிறுவனங்களையும் இந்த ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.
இரு நோக்கம்
மேலும் இந்த விழாவில் பேசிய மோடி, முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடு இரு நோக்கங்களை கொண்டது. ஒன்று இது நல்ல லாபத்தை கொடுக்கும். மற்றொன்று ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளதாரமான நாடாக இந்தியாவை மாற்றும் என்றும் கூறியுள்ளார். இந்த பாதுகாப்பு தொழில் துறை அபிவிருத்தியானது, எந்த நாட்டிற்கும் எதிரான அச்சுறுத்தலாகவோ அல்லது வழி நடத்தப்படவோ இல்லை என்றும் லக்னோவில் மோடி கூறியுள்ளார்.
வேலை வாய்ப்புகளை உருவாக்கும்
இந்த ஐந்து நாள் கண்காட்சியில் உத்திரபிரதேச அரசு 23 பூர்வாங்க உடன்படிக்கையில் கையெழுத்திடும். இது 50,000 கோடி ரூபாய் முதலீட்டினைக் கொண்டு வரும். இது தவிர 3,00,000 வேலை வாய்ப்புகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும் இந்தியா போன்ற மிகப்பெரிய ஒரு நாடானது ராணுவ தளவாடங்களுக்காக மொத்தமாக இறக்குமதியை நம்பி இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
உரிமம் அதிகரிப்பு
கடந்த 2014ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சிக்கும் வந்த பின்னர், பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் தயாரிப்பதற்காக வழங்கப்பட்ட உரிமங்களின் எண்ணிக்கை 210லிருந்து, 460 ஆக தற்போது உயர்ந்துள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் தற்போது பீரங்கி துப்பாக்கிகள், விமானம் தாங்கி கப்பல், போர்க்கப்பல், நீர்மூழ்கி கப்பல்கள், இலகு ரக போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்தியாவுக்கு திறமை உண்டு
பாதுக்காப்பு உற்பத்தியில் இந்தியாவுக்கு வரம்பற்ற சாத்தியங்கள் உள்ளன. ஏனெனில் இந்தியாவில் அதற்கேற்ற திறமை, தொழில்நுட்பம், புதுமை மற்றும் உள்கட்டமைப்பு, ஒரு சாதகமான கொள்கை, கட்டமைப்பு மற்றும் முதலீடு, தேவை, ஜனநாயகம் மற்றும் முடிவெடுப்பதில் உத்தரவாதம் உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முதலீடு செய்யுங்கள்
ஆக உங்கள் அனைவரையும் நான் இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்கிறேன். இந்தியாவில் நீங்கள் செய்த முதலீடு உங்களுக்கு பெரிய வருமானத்தை தரும். இது உங்களுக்கு தன்னம்பிக்கை அடையவும் உதவும். மேலும் இந்தியாவிற்காக, உலக நாடுகளுக்காகவும், மேக் இன் இந்தியா என்பது தாரக மந்திரமாக உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி அதிகரிப்பு
கடந்த 2014ம் ஆண்டு பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி சுமார் 2000 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இது 17,000 கோடி கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியை 35 ஆயிரம் கோடியாக உயர்த்துவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
அச்சுறுத்தல்களை எதிகொள்ள முயற்சி
தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பயங்கரவாதம் மற்றும் சைபர் அச்சுறுத்தல் உள்ளிட்டவை உலக நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆக இந்த புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையிலான புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது என்றும் பெருமைபடக் கூறியுள்ளார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications