5% வட்டியில் 3 லட்சம் வரை கடன் வழங்கும் அரசு.. மத்திய அரசின் இந்த சூப்பரான திட்டம் பற்றி தெரியுமா?

இந்திய குடிமக்களுக்கு உதவும் வகையில் மானியங்கள் மற்றும் பிற நன்மைகளை வழங்குவதற்காக எண்ணற்ற திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சப்டம்பரில் தொடங்கப்பட்ட "பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டம்" கைவினை கலைஞர்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டம் இந்தியாவில் உள்ள 18 பாரம்பரிய வணிகர்களை ஆதரிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

PM விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் சிற்பிகள், கொத்தனார், கொல்லர்கள், முடி திருத்துபவர்கள், தச்சர்கள், பொற்கொல்லர்கள் போன்ற நபர்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் தகுதி பெரும் பயனாளிகள் ஆரம்பத்தில் 1 லட்சம் கடனுக்கு தகுதி பெறுவார்கள். ஆரம்ப கடனை வெற்றிகரமாக செழித்து முடித்து விட்டால் மீண்டும் 2-வது கடனுக்கு விண்ணப்பிக்கலாம். 2வது முறை விண்ணப்பிக்கும் போது ரூ.2 லட்ச ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.

 5% வட்டியில் 3 லட்சம் வரை கடன் வழங்கும் அரசு.. மத்திய அரசின் இந்த சூப்பரான திட்டம் பற்றி தெரியுமா?

தகுதி: இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஒரு நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் மற்றும் அவரது வயது 18 வயதுக்கு குறைவாக இருக்கக்கூடாது. PMEGP, PM SVANidhi மற்றும் முத்ரா கடன் ஆகிய திட்டங்களின் மூலம் ஏற்கனவே கடனைப் பெற்றிருக்கக் கூடாது.

வழங்கப்படும் கடன்களின் பலன்கள்: PM விஸ்வகர்ம யோஜனாவின் கீழ் வழங்கப்படும் கடன்களில் மிகவும் வசதியான ஒன்று என்று பார்த்தால் அவை பிணையம் இல்லாமல் வழங்கும் கடன்களாகும். அதாவது அதற்கு நீங்கள் எந்த வித உத்தரவாதம் அல்லது பாதுகாப்பை வழங்கத் தேவையில்லை. மேலும் கடன்கள் குறைந்த வட்டி விகிதங்களுடன் வருவதால் அவை பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான வட்டி விகிதம் 5 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

PM விஸ்வகர்மா யோஜனாவின் கூடுதல் நன்மைகள்: கடன் வசதியைத் தவிர, PM விஸ்வகர்மா யோஜனாவின் பயனாளிகளுக்கு இன்னும் பல நன்மைகள் வழங்கப்படுகின்றன.

பயிற்சி: PM விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் பயனாளிகள் தங்கள் திறன்களை மேம்படுத்த சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் பயனாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

நிதி உதவி: பல பாரம்பரிய வணிகங்களுக்கு குறிப்பிட்ட கருவிகள் தேவைப்படுவதால், பயனாளிகள் தங்கள் பணிக்குத் தேவையான கருவிகளை வாங்குவதற்கு உதவியாக ரூ.15,000 நிதி மானியமாக வழங்கப்படுகிறது.

நீங்கள் PM விஸ்வகர்மா யோஜனாவிற்குத் தகுதி பெற்றிருந்தால், நீங்கள் கடன்களைப் பெறுவது மட்டுமல்லாமல், திறன் மேம்பாடு, பயிற்சியின் போது தினசரி நிதி உதவி மற்றும் உங்கள் வர்த்தகத்திற்கான அத்தியாவசிய கருவிகளை வாங்குவதற்கான உதவியும் சேர்த்து பெறுவீர்கள்.

தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, அடையாள அட்டை, இருப்பிடச் சான்றிதழ், மொபைல் நம்பர், ஜாதிச் சான்றிதழ், வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

எப்படி விண்ணப்பிப்பது?: PM விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+