பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் என்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான திட்டமாகும். சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர், நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம். இந்த ஆண்டோடு PM ஆவாஸ் யோஜனா திட்டம் முடிவடைய இருந்தது. ஆனால் அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை நீட்டித்துள்ளது. இதனுடன் சில புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி பைக்குகள் மற்றும் பிரிட்ஜ் வைத்திருக்கும் நபர்களுகளும் PM ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த மாற்றங்கள், விண்ணப்பதாரர்களின் வரம்பை விரிவுபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், 2029-ஆம் ஆண்டுக்குள் வீடற்ற நிலையை ஒழிக்கும் இலக்கை அடையும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

முதன் முதலில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு தகுதியான ஏழை மக்களின் பட்டியல் 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு அந்த பட்டியலைத் தற்போது புதுப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஒரு கூட்டத்தை நடத்தி அதில் இருந்து வீடு தேவைப்படும் நபர்களை தேர்வு செய்யும் பணியில் தற்போது அரசு ஈடுபட்டு வருகிறது.
PMAY-இன் இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ், கிராமத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் அதிகாரம் கிடையாது. அதாவது அவர்களின் விருப்பத்திற்கு இணங்க இனி விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்ய முடியாது.
இந்த புதிய வழிகாட்டுதல்களின் படி, பாரபட்சத்தை தடுக்கவும், வீட்டு வசதி திட்டம் மிகவும் தகுதியான நபர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதமர் வீட்டு வசதி திட்டம் (PMAY): பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டம், 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வீடு வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
PM அவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு வாங்குவதற்கு பெரும் கடன்களுக்கு கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் (CLSS) மூலம் அரசு மானியத்தை வழங்குகிறது.
பயனாளிகள் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு (EWS), குறைந்த வருமானம் கொண்ட பிரிவு(LIG) மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட பிரிவு (MIG) என மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்.
2024-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் PM அவாஸ் யோஜனா திட்டத்திற்கு 66 சதவீத நிதியை உயர்த்தி, மொத்த செலவினத்தை ரூ.79,000 கோடியாக உயர்த்தி அறிவித்தார். கோவிட்-19 இருந்தபோதிலும், மூன்று கோடி வீடுகளை கட்டும் இலக்கை திட்டம் நெருங்கி வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு கோடி வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
PMAY இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது - நகர்ப்புற மற்றும் கிராமப்புறம். நகர்ப்புற திட்டம் 4,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள EWS, LIG மற்றும் MIG மக்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறத் திட்டம், கிராமப்புறங்களில் வீட்டுவசதி வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications