பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசு 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில், இன்று பட்ஜெட் கூட்டத்தொடரைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றித் துவக்கி வைத்துள்ளார்.
குடியரசு தலைவர் உரையில் மத்திய அரசின் பல முக்கியமான பணிகளைப் பாராட்டினார். குறிப்பாக வீட்டுக் கட்டுமான, குடிநீர் சேவை திட்டங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா
கொரோனா தொற்றுக் காலத்தில் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு அறிமுகம் செய்த பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம், ஒவ்வொரு மாதமும் ஏழை மக்கள் இலவசமாக உணவுப் பொருட்களைப் பெற்று வருகின்றனர் எனக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.
ஜல் ஜீவன் திட்டம்
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் மூலம் நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ராம்நாத் கோவிந்த் கூறினார்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
மேலும் இந்தியாவில் அனைவருக்கும் சொந்த வீடு அளிக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு உருவாக்கிய பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி வீடுகள் ஏழை மக்களுக்கு மானியம் அளிக்கப்பட்டு உள்ளது.
கிராமம்
மேலும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் திட்டத்தின் கீழ் 1.17 கோடி வீடுகளுக்கு மானியம் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகளின் மொத்த மதிப்பு 1.5 லட்சம் கோடி ரூபாய்.
ஜன் தன் - ஆதார் - மொபைல்
மத்திய அரசின் ஜன் தன் - ஆதார் - மொபைல் இணைப்பு மூலம் நாட்டு மக்களுக்குக் கூடுதலான அதிகாரமளிக்கப்பட்டு வருகிறது. இந்த இணைப்பு மூலம் ஏற்படும் மாற்றம் தற்போது வெளிப்படையாகத் தெரிகிறது.
நேரடி மானியம்
இந்தியாவில் 44 கோடி மக்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு உள்ள காரணத்தால், மக்கள் தற்போது நேரடியாக மானியங்களைப் பெற்று வருகின்றனர். இதனால் மத்திய அரசுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டு உள்ளது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி
மேலும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் சுமார் 11 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு 1.80 லட்சம் கோடி ரூபாய் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த முதலீடு மூலம் இந்திய விவசாயத் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவின் விவசாய ஏற்றுமதி 25 சதவீதம் வரையில் உயர்ந்து 3 லட்சம் கோடி ரூபாயை தொட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications