அரசு சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்கிறது. இதில் வீட்டு வசதி இல்லாதவர்களுக்கு நிதியுதவி வழங்கி அவர்களுக்கு வீடு கட்ட உதவும் வகையில் செயல்படும் திட்டம் "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY-U 2.0)" இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வீடுகள் கட்ட நிதியுதவி வழங்கப்படுகிறது.
தற்போது மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அர்பன் 2.0 என்ற திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 1 கோடி நகர்ப்புற ஏழைகள், நடுத்தரவர்க்க குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு வீடு கட்ட உதவி செய்து வருகிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்திற்கு ஆகஸ்ட் 9, 2024 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

2024-ஆம் ஆண்டின் செப்டம்பர் 1-ஆம் தேதிக்கு பிறகு சொத்து வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு வீட்டு கடனை பெற்ற தனிநபர்கள் இந்த திட்டத்தின் கீழ் தங்கள் வீட்டு கடனில் 4 சதவீதம் வரை மானியத்தை பெறலாம். இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும். செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றுக்கும் ரூ.2.50 லட்சம் மானியம் வழங்கப்படும்.
பிரதான் மந்திரியின் இலவச வீடு திட்டம் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்திற்கு நகர்ப்புறங்களில் வசிக்கும் தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது. ஆனால் விண்ணப்பிப்பதற்கு தனி நபர்கள் சில தகுதியைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
பிரதம மந்திரியின் இலவச வீடு திட்டம் கிராமப்புறங்களில் வீடு கட்டவும் நிதியுதவி வழங்குகிறது. பல்வேறு வருமான பிரிவுகளை சேர்ந்த தனி நபர்கள், SC/ST பிரிவினர், சிறுபான்மையினர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், சமூக ரீதியாக பின்தங்கிய குழுக்கள் போன்றவர்களுக்கு தங்களுடைய வீட்டுக் கனவை பூர்த்தி செய்ய வழங்கப்பட்டு வருகிறது.
PMAY திட்டத்தில் மானியம் பெற யார் தகுதியுடையவர்கள்?: பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகள் (EWS), குறைந்த வருமானக் குழுக்கள் (LIG) மற்றும் நடுத்தர வருமானக் குழுக்கள் (MIG) ஆகியவற்றைச் சேர்ந்த தனிநபர்கள் இந்தத் இடத்தின் கீழ் மானியம் பெறலாம். மானியத்திற்குத் தகுதியுடையவர்களாகக் கருதப்பட, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வருமான அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
EWS: ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை
LIG: ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் வரை
MIG: ஆண்டு வருமானம் ரூ.9 லட்சம் வரை
மானியத்திற்கு தகுதி பெற, பயனாளிகள் வருமானச் சான்றுகளை வழங்குவது அவசியம்.
யார் இந்த திட்டத்திற்கு தகுதி கிடையாது?: கடந்த 20 ஆண்டுகளில் கிராமப்புற அல்லது நகர்ப்புற அரசாங்க வீட்டு வசதி திட்டத்தின் மூலம் விண்ணப்பிப்பவர் எந்தவித பலன்களையும் பெற்றிருக்கக் கூடாது.
கடன் மற்றும் மானியம்: PMAY-U 2.0 திட்டத்தின் கீழ், தகுதியுள்ள நபர்களுக்கு ரூ.35 லட்சம் அல்லது அதற்கும் குறைவான கடன்களுக்கு 4% வட்டி மானியம் வழங்கப்படுகிறது. ரூ.8 லட்சம் வரை கடன் தொகையுடன். இந்த மானியம் 12 ஆண்டுகள் வரையிலான கடன் காலத்திற்கு பொருந்தும். கூடுதலாக, பயனாளிகளுக்கு ரூ.1.80 லட்சம் நிதி உதவி கிடைக்கும், இது 5 வருட தவணைகளில் வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா 2.0 திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் https://pmay-urban.gov.in என்ற அதிகாரப்பூர்வ PMAY இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: ஹோம் பேஜில் இருக்கும் "Apply for PMAY-U 2.0" என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: விண்ணப்ப செயல் முறையை தொடங்குவதற்கு முன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை புரிந்து கொண்டு திட்டத்தின் வழிகாட்டுதல் குறித்தும் கவனமாக ஆய்வு செய்யவும்.
ஸ்டெப் 4: PMAY அர்பன் 2.0 திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு உங்கள் தகுதியை சரிபார்க்க ஆண்டு வருமானம் மற்றும் இதர விவரங்களை வழங்கவும்.
ஸ்டெப் 5: ஆதார் சரிபார்ப்பு செயல்முறை முடிப்பதற்காக உங்கள் ஆதார் எண்ணை வழங்கவும்.
ஸ்டெப் 6: உங்களுடைய முகவரி, வருமானம் மற்றும் தேவையான பிற தகவல்களை விண்ணப்ப படிவத்தில் துல்லியமாக நிரப்பவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து உங்கள் விண்ணப்பநிலையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications