சென்னை: சொந்த தொழிலை தொடங்க வேண்டும் என்ற கனவு பலருக்கு இருக்கும். ஆனால், போதிய முதலீடு இல்லாதது, வங்கி கடன் கிடைப்பதில் சிக்கல் போன்ற பல காரணங்களால் அந்த கனவு நிறைவேறாமல் இருக்கும். அப்படிப்பட்ட நபர்களுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரியின் PMEGP திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் (Prime Minister's Employment Generation Programme - PMEGP) என்பது மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தால் (Mo MSME) நிர்வகிக்கப்படும் திட்டமாகும். புதிய சுயதொழில் மற்றும் குறுந்தொழில் செய்யும் நபர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுயவேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

உற்பத்தி நிறுவனம் தொடங்க ரூ.50 லட்சம் வரையிலான கடன்களுக்கும், சேவை துறையில் ரூ.20 லட்சம் வரையிலான கடன்களுக்கும், மொத்த திட்ட செலவில் 15% முதல் 35% வரை மானியமாக வழங்கப்படுகிறது. ஆனால் உங்களின் மொத்த திட்ட செலவு உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ. 50 லட்சத்திற்கும் மேலும், சேவை பிரிவுகளுக்கு ரூ. 20 லட்சத்திற்கும் மேலும் தாண்டிவிட்டால், வங்கிகளிலிருந்து மீதி கடன்களை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்கனவே PMEGP திட்டத்தின் கீழ் கடன் பெற்ற நிறுவனங்கள், தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய இரண்டாவது கடன் பெறும்போது, உற்பத்தி துறையில் அதிகபட்சம் ரூ.1 கோடி வரையிலும், சேவை துறையில் ரூ.25 லட்சம் வரையிலும் மானியம் பெற தகுதி உடையவை. இரண்டாவது கடனுக்கான அதிகபட்ச மானியத்தொகை, உற்பத்தி துறைக்கு ரூ.15 லட்சம் ஆகும். இவை வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப்பகுதிகளுக்கு ரூ. 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேவை துறைக்கு ரூ. 3.75 லட்சம் ஆகும். அதுவே வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப்பகுதிகளுக்கு ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
தொழில் விரிவாக்கத்திற்கான மொத்த திட்ட செலவு உற்பத்தி துறையில் ரூ.1 கோடியையும், சேவை துறையில் ரூ.25 லட்சத்தையும் தாண்டினால், மீதமுள்ள தொகையை வங்கிகளிடம் கடனாக பெறலாம். இத்தகைய கடன்களுக்கு அரசு மானியம் பொருந்தாது.
PMEGP திட்டத்திற்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி தேவை?: எட்டாம் வகுப்பு முடித்த அனைவரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஏற்கனவே அரசு மானியம் (PMRY, REGP, CMEGP, PMEGP) அல்லது இந்திய அரசு அல்லது மாநில அரசின் வேறு ஏதேனும் திட்டம் மூலம் மானியம் பெற்றுள்ள யூனிட்கள் PMEGP திட்டத்திற்குத் தகுதி பெறாது. இறைச்சி கடை, போதைப் பொருட்கள் சார்ந்த தொழில்கள், செடிகள், ஆடு, மீன், கோழி, மாடு வளர்ப்பு போன்ற தொழில்களை தொடங்குவதற்கு PMEGP திட்டம் பொருந்தாது.
PMEGP திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரூரல் ஏரியா சர்டிபிகேட், உங்கள் திட்டத்தின் மதிப்பீட்டு அறிக்கை, சிபில் ஸ்கோர் ரிப்போர்ட் ஆகிய ஆவணங்கள் தேவைப்படலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?: PMEGP திட்டத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் தான் வசிக்கும் மாவட்டத்தில் இருக்கும், காதி மற்றும் கதர் கிராம அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது https://www.kviconline.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications