இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) கணக்கு வைத்திருந்தால், உங்கள் KYC விவரங்களை விரைவில் புதுப்பிக்க வேண்டும். தோராயமாக 325,000 PNB கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தங்கள் KYC விவரங்களை இன்னும் புதுப்பிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே PNB வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் KYC புதுப்பிப்புகளை முடிக்க ஆகஸ்ட் 12 வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களின் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும் என்று வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதற்காக KYC புதுப்பிப்பு செயல்முறையை செய்ய வேண்டும்?: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அனைத்து வங்கிகளும் தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் KYC விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். மார்ச் 31 வரை PNB வங்கியில் KYC விவரங்களைப் புதுப்பிக்காத சுமார் 325,000 கணக்கு வைத்திருப்பவர்களை வங்கி அடையாளம் கண்டுள்ளது.

இந்த வாடிக்கையாளர்கள் தங்கள் KYC தகவலைப் புதுப்பிக்க ஆகஸ்ட் 12 வரை காலக்கெடு விதித்துள்ளது. அதாவது நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது. காலக்கெடுவிற்குள் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் KYC புதுப்பிப்பு செயல்முறைக்கு இணங்கவில்லை என்றால், இவர்களுடைய வங்கி கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31 ஆம் தேதிக்குள் KYC-ஐப் புதுப்பிக்காதவர்களுக்கு மட்டுமே இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும் என்று PNB வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் விவரங்களை சரியான நேரத்தில் புதுப்பித்தால், அவர்களின் கணக்குகள் தொடர்ந்து சீராக இயங்கும். இல்லையெனில், அவர்களின் கணக்குகள் செயலிழந்து, பணத்தை எடுக்கவோ, கடன் வாங்கவோ அல்லது வேறு நோக்கங்களுக்காக கணக்கைப் பயன்படுத்தவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து வாடிக்கையாளர்களால் பணத்தை டெபாசிட் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.
KYC-ஐ எவ்வாறு புதுப்பிப்பது?: KYC-ஐப் புதுப்பிக்க, வாடிக்கையாளர்கள் தங்கள் அருகிலுள்ள PNB வங்கி கிளையை நேரில் பார்வையிடலாம். அடையாளச் சான்று, முகவரிச் சான்று, சமீபத்திய புகைப்படம், பான் கார்டு, வருமானச் சான்று போன்ற தேவையான ஆவணங்களை அவர்கள் கொண்டு செல்ல வேண்டும். மாற்றாக, PNB One, Internet Banking Services (IBS) மூலமாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்புவதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் KYC-ஐப் புதுப்பிக்கலாம்.
PNB வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கு செயலிழந்து போவதை தடுப்பதற்கு முன் கூட்டியே கேஒய்சி செயல்முறையை முடிப்பது சிறந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications