டெல்லி: மோசமான கடன்கள் அதிகரிப்பால் பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர இழப்பாக 492.28 கோடி ரூபாயை கண்டுள்ளது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், கடந்த ஆண்டில் 246.51 கோடி ரூபாய் நிகரலாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே செப்டம்பர் காலாண்டில் 507.05 கோடி ரூபாய் லாபம் கண்டிருந்ததும் கவனிக்கதக்கது.

இதன் நிகர வட்டி வருவாயானது 4,355 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே சிஎன்பிசி கணிப்பின் மூலம் 4,684.2 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் மொத்த வருமானம் 7.49 சதவிகிதம் அதிகரித்து 15,967.49 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 14,845.24 கோடி ரூபாயாக இருந்தததாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதே டிசம்பர் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர இழப்பானது 501.93 கோடி ரூபாயாகும்.
இதே மொத்த வாராக்கடன் அளவு 76,809 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 77,733 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே நிகர வாராக்கடன் அளவு டிசம்பர் காலாண்டில் 30,518.92 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 35,675 கோடி ரூபாயாக ஆகவும் இருந்துள்ளது.
இதே மொத்த வாராக்கடன் அளவு சதவிகிதத்தில் 16.30% ஆக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டில் 16.33% ஆகவும் இருந்துள்ளது. இதே நிகர வாராக்கடன் அளவு 7.18% ஆக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் டிசம்பர் காலாண்டில் 8.22% ஆகவும் இருந்துள்ளது.
இதே இந்த வங்கியின் மொத்த சொத்து விகிதம் டிசம்பர் காலாண்டில் 8,20,779.98 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 7,47,806.10 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வங்கியின் செயல்பாட்டு வருவாய் 3,762.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3,099.86 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இந்த நிலையில் இந்த வங்கி பங்கின் விலையானது 1.05 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 56.75 ரூபாயாகவும் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications