பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பந்தன் வங்கி ஆகியவை கடன்களுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.
MCLR அல்லது நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் மார்ஜினல் காஸ்ட் என்பது, ஒரு நிதி நிறுவனம் கொடுக்கப்பட்ட கடனுக்கு வசூலிக்க வேண்டிய அடிப்படை வட்டி விகிதமாகும்.
அதை அடிப்படையாக வைத்து தான் ஒவ்வொரு கடனும் அளிக்கப்படுகிறது.
சிபில் ஸ்கோர்
இதேபோல் ஒவ்வொரு வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர், வருமான நிலை போன்ற பல காரணிகளை வைத்து வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதம் மாறுப்படுகிறது. இந்த நிலையில் தான் ஆர்பிஐ வங்கி ரெப்போ விகிதத்தை அடுத்த பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பந்தன் வங்கி ஆகியவை கடன்களுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி, நிதி அடிப்படையிலான கடன் வட்டி விகிதங்கள் அனைத்தையும் 10 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தியுள்ளது.
புதிய வட்டி விகிதம் மார்ச் 1, 2023 முதல் அமலுக்கு வருகின்றன.
PNB இணையதளத்தின்படி, பஞ்சாப் நேஷனல் வங்கி-யின் overnight கடனுக்கான வட்டி விகிதத்தை 7.90 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஒரு மாதம், மூன்று மாதங்கள் மற்றும் ஆறு மாதங்களுக்கான கடன் வட்டி விகிதங்கள் 8.10 சதவீதம், 8.20 சதவீதம் மற்றும் 8.40 சதவீதம் என உயர்ந்துள்ளது. மறுபுறம், ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் 8.40 சதவீதத்தில் இருந்து 8.50 சதவீதமாகவும், மூன்று ஆண்டு எம்சிஎல்ஆர் 8.70 சதவீதத்தில் இருந்து 8.80 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
பேங்க் ஆஃப் இந்தியா
பாங்க் ஆஃப் இந்தியா குறிப்பிட்ட கால இடைவெளி கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தியது. பேங்க் ஆஃப் இந்தியா இணையதளத்தின்படி, வங்கியின் overnight கடனுக்கான வட்டி விகிதத்தை 7.50 சதவீதத்தில் இருந்து மாறாமல் வைத்துள்ளது.
ஒரு மாதம், மூன்று மாதங்கள் மற்றும் ஆறு மாதங்களுக்கான வட்டி விகித்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்திய 7.95 சதவீதம், 8 சதவீதம் மற்றும் 8.25 சதவீதம் என உயர்த்தப்பட்டு உள்ளது. மறுபுறம், ஓராண்டு எம்சிஎல்ஆர் 8.40 சதவீதத்தில் இருந்து 8.50 சதவீதமாக உயர்ந்துள்ளது, அதே சமயம் மூன்று ஆண்டு எம்சிஎல்ஆர் 8.60 சதவீதத்தில் இருந்து 8.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த விகிதங்கள் மார்ச் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது.
பந்தன் வங்கி
பந்தன் வங்கி நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களின் மாற்றங்களை பிப்ரவரி 28, 2023 முதலே அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
பந்தன் வங்கியின் இணையதளத்தின்படி, வங்கியின் overnight கடனுக்கான வட்டி விகிதத்தை 6.71% சதவீதமாக உள்ளது.
ஒரு மாதம், மூன்று மாதங்கள் மற்றும் ஆறு மாதங்களுக்கான வட்டி விகிதங்கள் 6.71 சதவீதம், 8.21 சதவீதம் மற்றும் 8.21 சதவீதம் ஆக உள்ளது. மறுபுறம், ஒரு வருட எம்சிஎல்ஆர் இப்போது 10.96 சதவீதமாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications