இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB) பொது வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை ஆகஸ்ட் 1-ஆம் தேதி 2024 முதல் திருத்தி உள்ளது. அதன்படி ரூ. 3 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.
400 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட FD-களில் அதிக சலுகைகளை PNB வங்கி வழங்குகிறது. 400 நாட்கள் கொண்ட FD-களில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.3 சதவீதமும், 60 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு 7.8 சதவீதமும், 80 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு 8.10 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

PNB பேங்க் அதன் 1 வருட FD-களில், பொது வாடிக்கையாளர்களுக்கு 6.85% வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 7.35 % மற்றும் 80 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு 7.65 % வட்டி வழங்குகிறது.
2 முதல் 3 ஆண்டுகளுக்கான FD-களில், PNB பேங்க் 7.85 % வரை வட்டி வழங்குகிறது. அதில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.05 %, மூத்த குடிமக்களுக்கு 7.55 % மற்றும் 80 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு 7.85 % வட்டி விகிதத்தை வழங்குகிறது.
PNB பலாஷ் திட்ட FD விகிதங்கள்: 1204 நாட்கள் மற்றும் 1895 நாட்கள் கொண்ட இரண்டு திட்டங்கள் PNB பலாஷ் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. இது PNB நிறுவனம் தொடங்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
1204 நாட்கள் முதிர்வுக்காலம் கொண்ட FD-களில், பொது வாடிக்கையாளர்களுக்கு 6.45 %, மூத்த குடிமக்களுக்கு 6.95 % மற்றும் 80 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு 7.25 % வட்டி விகிதத்தை வழங்குகிறது.
1895 நாட்களுக்கான அதன் மற்றொரு FD திட்டத்தில் சற்று குறைவான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு 6.40 %, மூத்த குடிமக்கள் 7.2 % மற்றும் 80 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு 7.25 % வட்டி வழங்கப்படுகிறது.
பேங்க் ஆஃப் இந்தியா FD விகிதங்கள்: பேங்க் ஆஃப் இந்தியா ரூ. 3 கோடி வரையிலான டெபாசிட்டுகளுக்கான FD விகிதங்களையும் ரூ.3 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான டெபாசிட்களுக்கான FD விகிதங்களையும் மாற்றியுள்ளது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD-களுக்கு 3% முதல் 6% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. 666 நாட்களுக்கு ரூ.3 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு அதிகபட்சமாக 7.30% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications