இந்தியாவில் வீட்டுக் கடன் வர்த்தகம் மிகப்பெரியது, அதிலும் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ஆகிய திட்டங்களை அறிமுகம் செய்த பின்பு இப்பிரிவு வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் மிகையில்லை.
இந்தச் சூழ்நிலையில் வீட்டுக்கடன் பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை நிறுவனமான பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கடந்த 9 நாட்களில் மட்டும் சுமார் 100 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
118 சதவீதம் வளர்ச்சி
கடந்த மே 25ஆம் தேதி பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனப் பங்குகள் வெறும் 403.70 ரூபாய்க்கு வர்த்தகம் செய்து வந்த நிலையில், தற்போது 118 சதவீதம் வளர்ச்சி அடைந்து 881.40 ரூபாய் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ்
அதாவது நீங்கள் மே 25ஆம் தேதி பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனப் பங்குகள் மீது 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது 2,18,000 ரூபாயாக உயர்ந்திருக்கும். கொரோனா தொற்று, பொருளாதாரச் சரிவு ஆகியவற்றுக்கு மத்தியில் இந்தத் தடாலடி வளர்ச்சி பெரும் லாபமாக உள்ளது.
பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் பங்கு விலை
இன்றைய வர்த்தகத்தில் கூடப் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5 சதவீதம் வரையில் ஒரு பங்கு விலை 41.95 ரூபாய் வரையில் அதிகரித்து 881.40 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இந்த அதிரடி வளர்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா..?!
கார்லைல் குரூப் மற்றும் ஆதித்யா பூரி
பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனமான கார்லைல் குரூப் மற்றும் ஹெச்டிஎப்சி வங்கியின் முன்னாள் தலைவர் ஆதித்யா பூரி ஆகியோர் முதலீடு செய்வதாக அறிவித்த நிலையில், இந்நிறுவனப் பங்குகள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.
4000 கோடி ரூபாய் புதிய முதலீடு
ஆதித்யா பூரி தற்போது கார்லைல் குரூப்-ன் மூத்த ஆலோசகராக உள்ளார், இந்த வேளையில் இருவரும் இணைந்து சுமார் 4000 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளனர்.
அமெரிக்காவின் கார்லைல் குரூப்
இந்த முதலீட்டுச் சுற்றில் கார்லைல் குரூப் மட்டும் சுமார் 3,185 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்துள்ளது. இதன் வாயிலாகப் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் மிகப்பெரிய முதலீட்டாளராகக் கார்லைல் குரூப் விளங்குகிறது.
பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனப் பங்குகளில் நீங்கள் முதலீடு செய்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க..
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications