சேமிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க மக்கள் பலர் தங்கள் சேமிப்பை பத்திரமாக வைப்பதற்காக வங்கிகளின் உதவியை நாடுகின்றனர். அதற்காக வங்கிகளிலும் சிறந்த வட்டி விகிதங்களில் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் மக்களை ஈர்க்கும் பொருட்டு பல்வேறு வங்கிகள் சிறந்த சலுகைகளுடன் புதுப்புது திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் ரூ. 3 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட்களுக்கு 2 புதிய பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதில் ஒன்று 303 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட் திட்டம். இதற்கு 7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மற்றொன்று 506 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட் திட்டம். இதற்கு 6.7% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த புதிய திட்டங்கள் ஜனவரி 2025-ஆம் ஆண்டின் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

பிக்சட் டெபாசிட்களை பழமைவாத முதலீட்டாளர்கள் முதல் இளம் முதலீட்டாளர்கள் வரை அனைவரும் விரும்புவதற்கு காரணம் அதில் வழங்கப்படும் பாதுகாப்பான வருமானம் தான். பிக்சட் டெபாசிட்களுக்கு முதலீட்டின் போது என்ன வட்டி விகிதம் வழங்கப்பட்டதோ? அதே வட்டி விகிதம் தான் முதிர்வு காலம் முடியும் வரை வழங்கப்படும்.
PNB வங்கியின் சமீபத்திய வட்டி விகிதங்கள்: பஞ்சாப் நேஷனல் பேங்க் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்ச வட்டி விகிதம் 7.25 சதவீதம் 400 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட பிக்சட் டெபாசிட்களுக்கு கிடைக்கிறது.
மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 4 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 400 நாட்களுக்கு 7.75 சதவீதமாக உள்ளது. அதேபோல பஞ்சாப் நேஷனல் பேங்கின் புதிய 303 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட்களுக்கு மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். 506 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட்களுக்கு மூத்த குடிமக்களுக்கு 7.20 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.
சூப்பர் சீனியர் சிட்டிசன்களாக இருந்தால் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 4.30 சதவீதம் முதல் 8.05 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சமான வட்டி விகிதம் 8.05% 400 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கப்படுகிறது. 506 நாட்கள் கொண்ட பிக்சட் டெபாசிட்களுக்கு 7.50 சதவீத வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications