இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), பார்வையற்ற வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய டெபிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கான்டக்ட்லெஸ் டெபிட் கார்டு, பிஎன்பி அந்தஹ் திரிஷ்டி பிரெய்லி டெபிட் கார்டு (PNB ANTAH DRISHTI Braille) என்று அழைக்கப்படுகிறது. இந்த டெபிட் கார்டு பிரெய்லி முறைப்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வையற்றோர் தொடுதல் உணர்வை வைத்தே PNB டெபிட் கார்டுக்கு பிற வங்கிகளின் டெபிட் கார்டுக்குமான வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியும்.
பணத்தாள்களிலும் பார்வையற்றவர்கள் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் சாய்ந்த கோடுகள் இருக்கும். அதை தொட்டு உணர்ந்து எவ்வளவு தொகை என்பதை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். இதன் அடுத்த கட்டமாக தற்போது PNB பேங்க் இதுபோன்ற டெபிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.

பிஎன்பி அந்தஹ் திரிஷ்டி பிரெய்லி டெபிட் கார்டின் அறிமுகம், பார்வையற்ற நபர்களின் நிதி சுதந்திரம் மற்றும் வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் நிதியை எளிதாகவும் நம்பிக்கையுடனும் நிர்வகிக்க இந்த டெபிட் கார்டு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தஹ் திரிஷ்டி பிரெய்லி டெபிட் கார்டின் அம்சங்கள்: பார்வையற்றோருக்கான PNB வங்கியின் இந்த டெபிட் கார்டு பிரெய்லி முறைப்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உயர்த்தப்பட்ட புள்ளிகள், எழுத்துகள், எண்கள் மற்றும் குறியீடுகள் இருக்கும். இதனை விரல்களால் தொட்டு படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டெபிட் கார்டில் "PNB" என்ற பிராண்ட் பெயர் முக்கியமாக பொறிக்கப்பட்டுள்ளது, இது பார்வையற்ற வாடிக்கையாளர்களுக்கு PNB மற்றும் பிற வங்கிகளின் கார்டுகளை வேறுபடுத்துவதை எளிதாக்குகிறது. கூடுதலாக, டெபிட் கார்டுடன் வரும் வரவேற்பு கடிதமும் பிரெய்லி புள்ளிகளில் இருக்கும்.
வட்டமான நாட்ச்: இந்த டேபிட் கார்டில் சிப்பின் எதிர் பக்கத்தில் ஒரு வட்டமான பிளவு உள்ளது. இது கார்டுதாரருக்கு ஏடிஎம் மற்றும் பிஓஎஸ் இயந்திரங்களில் கார்டைச் செலுத்தும் போது கார்டின் திசையை அறிந்து கொள்ள உதவுகிறது.
பளபளப்பான ஸ்பாட் UV லேமினேஷன்: இந்த டெபிட் கார்டு, வங்கியின் லோகோவில் உயர்த்தப்பட்ட அமைப்புடன் பளபளப்பான ஸ்பாட் UV லேமினேஷனைக் கொண்டுள்ளது. இது பார்வைக் குறைபாடுள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் லோகோவை எளிதாகக் கண்டறியவும், கார்டின் காண்டாக்ட்லெஸ் சிம்பலைப் படிக்கவும், டெபிட் கார்டைப் பயன்படுத்துவதை எளிதாக்கவும் உதவுகிறது.
இந்த டெபிட் கார்டின் மற்ற முக்கிய அம்சங்கள்: PNB வங்கியில் சேமிப்பு கணக்குகளைக் கொண்ட பார்வைக் குறைபாடுள்ள நபர்கள், அருகிலுள்ள PNB கிளையிலிருந்து இந்த டெபிட் கார்டைப் பெறத் தகுதியுடையவர்கள்.
ஏடிஎம்-இல் இருந்து பணம் எடுப்பதற்கான ஒரு நாளைய வரம்பு - ரூ. 25,000
PNB வங்கியின் இந்த செயல்பாடு உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாக உள்ளது. இதன் மூலம் பார்வை குறைபாடு உள்ள நபர்கள் வங்கிகளுக்கு சென்று காத்திருந்து பணம் எடுக்காமல் தேவைப்படும் நேரங்களில் ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications