சென்னை: அரசாங்கத்திற்குச் சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் எந்தப் பரிவர்த்தனையும் செய்யாத சேவிங்ஸ் அக்கவுண்டுகளை வங்கி மூட உள்ளது. இந்த முடிவு, பேலன்ஸ் இல்லாமல் பயன்படுத்தப்படாமல் இருக்கும் அக்கவுண்டுகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
PNB வங்கி 3 வருடங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் சேவிங்ஸ் அக்கவுண்ட்களை ஆக்டிவேட் செய்து அதன் பேலன்ஸை பராமரிக்க, ஜூன் 30 வரை காலக்கெடு விதித்துள்ளது. PNB இந்த அறிவிப்பை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில், தங்கள் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

PNB வங்கி பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கி கணக்குகளில் மோசடி சம்பவங்கள் நடக்காமல் இருக்க இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கி கணக்குகளை தான் மோசடிக்காரர்கள் பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பான செயல்களைச் செய்கின்றனர். இதனைத் தடுக்கும் பொருட்டு வங்கி தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து PNB வங்கி, தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் கூறியதாவது, "கடந்த 3 ஆண்டுகளில் பல வாடிக்கையாளர்கள் கணக்குகளில் எந்த செயல்பாடும் இல்லை என்பதையும், இந்த கணக்குகளில் பேலன்ஸ் இல்லை என்பதையும், இதனால் இந்தக் கணக்குகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, வங்கி அவற்றை மூட முடிவு செய்துள்ளது" என்றும் தெரிவித்துள்ளது. இதனை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வங்கி நோட்டீஸ் அனுப்பிய தேதிகளையும் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, இந்த கணக்குகளை ஜூன் 1-ஆம் தேதி அன்று மூட PNB முடிவு செய்தது. ஆனால், அதன் பிறகு காலக்கெடுவை ஒரு மாதம் நீட்டித்தது.

ஆனால் சில அக்கவுண்டுகளை மூடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் டிமேட் அக்கவுண்டுகள், 25 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியரின் அக்கவுண்டுகள், மைனர் அக்கவுண்டுகள், PNB மூலம் குறிப்பிட்ட திட்டங்களுக்காக திறக்கப்பட்ட அக்கவுண்டுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால் முடக்கப்பட்ட அக்கவுண்டுகள், வருமான வரித்துறை உத்தரவுகள் அல்லது பிற சட்ட பூர்வ அதிகாரிகளால் முடக்கப்பட்ட அக்கவுண்டுகள் ஆகியவை மூடப்படாது.
காலக்கெடுவிற்குப் பிறகு வங்கிக் கணக்குகள் மூடப்பட்டவுடன், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கிளைக்குச் சென்று தேவையான அனைத்து ஆவணங்களுடன் KYC படிவத்தை நிரப்புவதன் மூலம் மட்டுமே அவற்றை மீண்டும் செயல்பட வைக்க முடியும். மேலும் விவரங்களுக்கு, கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது கிளையைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications