அமெரிக்கா - ஈரான் மோதல் தொடர்பாக முன் கூட்டியே கணித்து பாலிமார்க்கெட் (Polymarket), கல்ஷி (Kalshi) போன்ற முன்னறிவிப்புச் சந்தைகளில் பலரும் பந்தய (betting) வர்த்தகத்தில் ஈடுபட்டு பல கோடிகள் லாபம் பார்த்தது தற்போது தெரிய வந்துள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, அமெரிக்கா ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக பாலிமார்க்கெட்டில் $529 மில்லியனுக்கும் அதிகமான ஒப்பந்தங்கள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன.
பிப்ரவரி 28 அன்று தாக்குதல் நடந்த நாளில், பாலிமார்க்கெட்டில் மிகப்பெரிய ஒப்பந்தம் $90 மில்லியன் வர்த்தகத்தை ஈர்த்தது. அமெரிக்கத் தாக்குதலுடன் தொடர்புடைய ஜனவரி 31 தேதியிட்ட இரண்டாவது பெரிய ஒப்பந்தம் $42 மில்லியன் betting-களை ஈர்த்தது. போட்டி தளமான கல்ஷியில், ஈரானில் ஆட்சி மாற்றம் குறித்த பந்தயத்தில் $36 மில்லியன் வர்த்தகம் நடைபெற்றது. இவ்வர்த்தக உயர்வு, ஒழுங்குபடுத்தப்படாத முன்னறிவிப்பு தளங்களில் இன்சைடர் டிரேடிங் அதாவது முன் கூட்டியே தகவல் அறிந்தவர்களால் இத்தகைய பந்தய வர்த்தகங்கள் நடத்தப்பட்டதா என்ற சந்தேகத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஒழுங்குமுறை அதிகாரிகள் இந்த வர்த்தகம் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

பப்பல்மேப்ஸ் எஸ்ஏ பகுப்பாய்வு நிறுவனம், பிப்ரவரி 28 அமெரிக்கத் தாக்குதலின் சரியான தேதியில் பந்தயம் கட்டி ஆறு கணக்குகள் சுமார் $1 மில்லியன் லாபம் ஈட்டியதைக் கண்டறிந்தது. இந்தக் கணக்குகள் பிப்ரவரியில் புதிதாகத் தொடங்கப்பட்டு, தாக்குதல் தேதிகளில் மட்டுமே பந்தயம் கட்டியுள்ளது தான் சந்தேகத்தை வலுவடைய செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டிர்ம்ப் தான் இதன் பின்னணில் இருக்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறதாம்.
டெஹ்ரானில் குண்டுகள் வீசப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே சில கணிப்புகள் வெளியிட்டு பந்தயம் நடந்துள்ளது. பிப்ரவரி 27 ஒப்பந்தம் $25 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகத்தைக் கண்டது. பிப்ரவரி 28 ஒப்பந்தத்தில் $26,513 பந்தயம், அதன் உரிமையாளருக்கு $1,74,000 க்கும் அதிகமான லாபத்தை ஈட்டியது.
இது தொடர்பாக பாலிமார்க்கெட் சனிக்கிழமை உடனடியாகப் பதிலளிக்கவில்லை. பப்பல்மேப்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி நிக்கோலஸ் வைமன், புவிசார் அரசியல் நிகழ்வுகள் மீது நேரடியாகப் பந்தயம் கட்ட முன்னறிவிப்புச் சந்தைகள் முதன்மையானவை என்றார்.மோதல்கள், போர்கள், "தகவலறிந்த பங்கேற்பாளர்கள் விரைவாகச் செயல்பட தூண்டுதல்களை உருவாக்குகின்றன" என்றும் அவர் கூறினார். பாலிமார்க்கெட்டில் வர்த்தகம் செய்ய, டிஜிட்டல் பணப்பை போதும்.
மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் வேளையில், பாலிமார்க்கெட்டில் புதிய ஒப்பந்தங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு வளைகுடா நாடு ஈரானைத் தாக்குமா அல்லது அமெரிக்கா மார்ச் மாதத்திற்குள் ஈராக்கைத் தாக்குமா என்பது குறித்த பந்தயங்கள் இதில் அடங்கும்.
பாலிசைட்ஸ் ஜனவரியில் ப்ளூம்பெர்க்கிடம், ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் மார்ச் மாத இறுதிக்குள் சாத்தியமான பதவி நீக்கம் குறித்த பந்தயங்கள் அதிகரித்ததாகத் தெரிவித்தது. சந்தை அவரது பதவி நீக்கத்திற்கான வாய்ப்பை 40% என மதிப்பிட்டது.உள்விவரத் தகவலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கணக்குகளில் 90% இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தன. கமேனியின் மரணம் குறித்த ஊகங்கள் சில ஒப்பந்தங்களில் இடம்பெற்று, வன்முறை விளைவுகளை உருவாக்கும் என விமர்சகர்கள் வாதிட்டனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications