இந்திய ஐடி துறையில் எப்படியாவது வேலை கிடைத்துவிடாதா என ஒவ்வொரு வருடமும் பல லட்சம் பட்டதாரிகள் பெரும் கனவுடன் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்று வருகிறார். ஒட்டுமொத்த இன்ஜினியர்கள் பட்டதாரிகளில் பெரும் பகுதியினர் ஐடி துறைக்குள் நுழைய வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இருக்க என்ன காரணம்.
பொதுவாக பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்க விரும்புவோம், ஏன்..? படம் எப்படியும் நல்லா இருக்கும் கொடுத்த காசு வீணாகாது என்ற பெரும் நம்பிக்கை தான்.

அதேபோல பல லட்சம் மக்களின் வாழ்க்கையை மாற்றிய ஐடி துறையின் மீது மக்களுக்கு அதிகப்படியான நம்பிக்கை உள்ளதால் மாணவர்கள் மட்டும் அல்லாமல் பெற்றோர்கள் வரையில் ஐடி துறை பணியில் சேர்ந்துவிட்டால் வாழ்க்கை மொத்தமாக மாறிவிடும் என்ற நம்பிக்கையின் விளைவு தான் இதற்கு முக்கிய காரணம்.
அப்படி ஐடி துறைக்குள் செல்லும் போது வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் கட்டாயம் தேவை, அப்படி இந்தியாவின் டாப் 4 ஐடி சேவை நிறுவனத்தில் எந்த ஜாப் சேஃப்டி-க்கு எந்த நிறுவனம் பெஸ்ட் என்று மக்களிடம் Polling நடத்தப்பட்ட நிலையில் தமிழ் பேசும மக்கள் மிகவும் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
இந்த வாக்கெடுப்பில் கடைசி இடத்தை பிடித்தது விப்ரோ 13 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது, சமீபத்தில் விப்ரோ பிரஷ்ஷர்களை பணியில் சேர்த்துவிட்டு தேர்வுகள் மூலம் பணிநீக்கம் செய்த சம்பவம் மறக்க முடியாது. இதன் வெளிப்பாடாக கூட குறைத்த வாக்குகளை பெற்று இருக்க கூடும்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் ஜாப் சேஃப்டி-க்கு எந்த நிறுவனம் பெஸ்ட்..? என்ற வாக்கெடுப்பில் 3வது மற்றும் 2வது இடத்தை 15 சதவீத வாக்குகள் உடன் இன்போசிஸ், ஹெச்சிஎல் கைப்பற்றியுள்ளது. முதல் இடம் பிடித்த நிறுவனம் எது என்பதை கண்டுப்பிடித்திருக்க கூடும், நீங்கள் ஐடி ஊழியராக இருந்தால் செய்தியை படிக்கும் போதே கண்டுப்பிடித்திருக்க கூடும்.

ஆம், டாடா குழுமத்தின் ஐடி சேவை பிரிவான டிசிஎஸ் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 6.3 லட்சம் ஊழியர்களையும், 34 சதவீத பெண் ஊழியர்களை கொண்டு இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications