பல்வேறு சிரமங்களைக் கடந்து வந்து ரூ.79,700 கோடி நிறுவனத்துக்கு அதிபதியாகியுள்ள இந்தர் ஜெய்சிங்கானி, பொறுமை, கடினமான உழைப்பு, திடமான உறுதியுடன் செயல்பட்டவர்.
1968இல் அவரது 15ஆவது வயதில் தந்தையை இழந்தவருக்கு மூன்று சகோதரர்கள். தந்தை விட்டுச் சென்ற கடையை இந்தர் ஜெய்சிங்கானி எடுத்து நடத்தினார். இதனால் அவரது படிப்பை தாயார் பாதியிலேயே விட வேண்டிய சூழ்நிலை உருவானது.

இதன் மூலம் மும்பையின் லோஹர் வீட்டு வசதி பகுதியில் அவரது தந்தை ஒரு எலக்ட்ரிக் ஷாப் வைத்திருந்தார். தனது சகோதரர்கள் கிரிஹரி, அஜய், ரமேஷ் ஆகியோர் துணையுடன் இந்தர் தங்களது குடும்பத்துக்கென பாலிகேப் என்ற சிறிய தொழில் நிறுவனத்தைத் தொடங்கினார்.
2014இல் ஸ்விட்சுகள், ஸ்விட்ச் கியர்கள், எலக்ட்ரிக் ஃபேன்கள், எல்இடி லைட்டுகள பாலிகேப் தயாரிக்கத் தொடங்கியது.
முன்னதாக 1983இல் பாலிகேப் இந்தியா நிறுவனத்தை தொடங்கினார். தொடக்கத்தில் சிறிய கேரேஜில் வயர் தயாரிப்பை ஆரம்பித்தனர்.
குஜராத்தில் ஒரு புரொடக்ஷன் யூனிட்டை அமைத்தனர். பிவிசி இன்சூலேட்டடு வயர்கள், கேபிள்களைத் தயாரிக்கத் தொடங்கினர். விரைவிலேயே பல வகையான கேபிள்கள், பவர் கேபிள்கள், கண்ட்ரோல் கேபிள், பில்டிங் வயர்கள், கம்யூனிகேஷன் கேபிள்களைத் தயாரித்தனர்.
இந்திய மற்றும் உலகளாவிய தரத்துக்கு ஏற்ப வயர்களையும் கேபிள்களையும் இந்தர் ஜெய்சிங்கானி உருவாக்கினார். இதனால் அவரது வியாபாரம் பெருகத் தொடங்கியது. 2008இல் அவரது கம்பெனிக்கு உலக வங்கியின் நிதி நிறுவனமான இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷனின் நிதியுதவி கிடைத்தது. பாலிகேபின் பங்குகளையும் வாங்கியது இந்த நிறுவனம்.
2014இல் தனது போர்ட்போலியோவில் எல்இடி லைட்டுகள், ஸ்விட்சுகள், எலக்ட்ரிக் ஃபேன்கள் போன்ற தயாரிப்புகளைச் சேர்த்தது. 2019இல் பாலிகேப் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட்டார். 2021இல் போர்ப்ஸின் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றார்.
இப்போது அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.53,000 கோடி ஆகும். பாலிகேபின் சந்தை மதிப்பு ரூ.79,700 கோடி.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications