பொங்கல் பண்டிகை தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ளது. தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு ஏற்கனவே 6 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.
அத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்காக சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இந்த ரயில்கள் அறிவிக்கப்பட்ட சில மணிதுளிகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்த்தன. இதனால், தற்போது இந்த ரயில்கள் காத்திருப்பு பட்டியலுக்கு வந்துள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜன.14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, தற்போது சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு தினசரி இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களிலும் முக்கிய நாட்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரத்துக்கு 3 சிறப்பு ரயில்களும், சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு சிறப்பு ரயிலும் கடந்த 3-ம் தேதி அறிவிக்கப்பட்டன.
இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஐஆர்சிடிசி இணைய தளம் வழியாகவும், முன்பதிவு மையங்களிலும் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜன.12-ம் தேதி புறப்படும் சிறப்பு ரயில், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரத்துக்கு ஜன.13-ம் தேதி இயக்கப்படும் தலா ஒரு சிறப்பு ரயிலிலும் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்து இப்போது காத்திருப்போர் பட்டியல் ஆனது.
குறிப்பாக, சென்னை சென்ட்ரல் - நாகர்கோவிலுக்கு ஜன.12-ம் தேதி புறப்படும் சிறப்பு ரயிலில் சில நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது. இந்த ரயிலில் மதியம் ஒரு மணி நிலவரப்படி, காத்திருப்போர் பட்டியல் பதிவும் முடிந்து, ரெக்ரெட் செய்யப்பட்டது. இதுபோல, திருநெல்வேலிக்கும் தாம்பரத்துக்குக்கும் ஆன ஜன.19-ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயிலில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் முன்பதிவும் முடிந்தது.
சென்னை எழும்பூர், சென்ட்ரல் உட்பட முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் சிறப்பு ரயில்களில் டிக்கெட் எடுக்க பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். ஆனால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்ததால், டிக்கெட் கிடைக்காமல் பெரும்பாலான பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான கூடுதல் ரயில்கள், மற்றும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகாலம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தமிழகம் முழுவதிலும் வரும் ஜனவரி 14 முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications