பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 2.20 கோடி குடும்பங்கள் பலனடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே இதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டுள்ள. அதிகாரிகள் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்கி உள்ளனர்.
ஜனவரி 9-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கமும் வழங்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு பணம் வழங்கப்படவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த முடிவு எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, திமுக கூட்டணியில் உறுப்பினர்களாக இருக்கும் நபர்களிடமும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் சேர்க்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதற்கு ஏதுவாக மற்ற திட்டங்களில் இருந்து நிதியை மறு ஒதுக்கீடு செய்யும் ஆப்ஷன்கள் இருக்கிறதா என்பது குறித்தும் தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது. நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இந்த முறை 1,000 ரூபாய் வழங்கப்பட்டால்.. ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்படும் 1,000 ரூபாயை சேர்த்து 2000 ரூபாயாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு முறையும் பொங்கல் பண்டிகையின் போது 21 பொருட்கள், அதோடு 1,000 ரூபாயும் சேர்த்து வழங்கப்படும். ஆனால் இந்த முறை நிதி நிலவரங்களின் காரணமாக அரசு 1,000 ரூபாயை வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் மேலே கூறப்பட்டுள்ளது போல் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
அதோடு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக் காலம் என்பதால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கேற்ப கூட்டுறவுத் துறையின் மூலம் "கூட்டுறவுப் பொங்கல்" என்ற பெயரில் பொதுமக்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பொங்கல் தொகுப்பு விற்பனையைத் தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் டிசம்பர் 19, 2024 அன்று தொடங்கி வைத்தார். இந்தப் பொங்கல் தொகுப்பு விற்பனையின் மூலம் இனிப்புப் பொங்கல் தொகுப்பு, கூட்டுறவு சிறப்புப் பொங்கல் தொகுப்பு, பெரும் பொங்கல் தொகுப்பு என்று 3 வகையான பொங்கல் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 3 தொகுப்புகளின் விலைக்கு ஏற்றவாறு பொருட்கள் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications