தமிழர் திருநாளா பொங்கல் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாடிட தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும், பொங்கல் பரிசு தொகுப்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதோடு வேட்டி, சேலையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கலுக்கான அறிவிப்பு எற்கனவே வந்த நிலையில், ரொக்க தொகை குறித்த அறிவிப்பை மட்டும் வெளியிடாமல் இருந்த தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கமும் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணத்தின் விநியோகத்தை சுமூகமாக நடத்த டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பொதுமக்களுக்கு நெரிசல் இல்லாமல் பரிசு பெற உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதேபோல் ரேஷன் கிடைகளில் 8-9 ஆம் தேதி முதல் கிடைக்கும் என தெரிகிறது.

சென்னையில் அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன் வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் இன்று டோக்கன் விநியோகம் செய்யப்படாத பகுதிகளில் நாளை முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறதுய. இந்த டோக்கன் மூலம் பரிசு பெறும் தேதி மற்றும் நேரம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. டோக்கனில் உள்ள தகவலின்படி ரேஷன் கடைக்கு சென்று பரிசை பெற்றுக்கொள்ளலாம். இந்த முறை நெரிசலை தவிர்த்து அனைவருக்கும் எளிதாக பரிசு கிடைக்க உதவும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இதே முறை பின்பற்றப்படுகிறது.
அரசு ஊழியர்களில் வீடுகளுக்கு வந்து கொடுக்கும் டோக்கனில் ரேஷன் கடை பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர், அட்டை எண், தெரு, டோக்கன் எண் விவரங்கள் ஆகியவை இருக்கும்.
பொங்கல் பரிசில் ரூ.3,000 ரொக்கம் உட்பட தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவை அடங்கும். இதனுடன் வேட்டி, சேலை வழங்கப்படும். இது சாமானிய மக்களுக்கு பண்டிகை செலவுகளை ஈடுகட்ட உதவும். சென்னை மற்றும் மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளதால், விரைவில் பரிசு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications