தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழர்கள் குடும்பத்தினரோடு கொண்டாடி மகிழக்கூடிய பண்டிகைகளில் முக்கியமானது பொங்கல் .
பொங்கல் பண்டிகையை மக்கள் இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மாநில அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது. பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி ,சர்க்கரை , கரும்பு உள்ளிட்ட அனைத்தும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் .

அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்க பணம் கொடுக்கும் பழக்கமும் கொண்டுவரப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2500 ரூபாயை பொங்கல் பரிசு தொகையாக அறிவித்தார்.
இதனை அடுத்து ஆட்சி அமைத்த முதலமைச்சர் ஸ்டாலின் ஆயிரம் ரூபாயை பொங்கல் பரிசு தொகையாக வழங்கினார். ஆனால் கடந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் ஏதும் வழங்கப்படவில்லை. அரிசி, சர்க்கரை , கரும்பு ஆகியவை மட்டுமே வழங்கப்பட்டன. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த முறை நிச்சயம் அரசு பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்கத்தையும் வழங்கும் என்று எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது .

தமிழ்நாடு அரசு 3000 ரூபாயை பொங்கல் பரிசு தொகையாக வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன . ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பில் இருந்து பொங்கல் பரிசு தொகை குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 5000 ரூபாயை பொங்கல் பரிசு தொகையாக வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க தொகையும் வழங்குவதற்கான அழுத்தம் அதிகரித்திருக்கிறது. இதற்கு இடையே அரசு மாநிலத்தின் தற்போதைய நிதி நிலவரம் பொங்கல் பரிசு தொகுப்போடு 3000 ரூபாய் ரொக்க பணத்தை கொடுத்தால் அரசுக்கு ஏற்படும் செலவுகள் குறித்து அதிகாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணத்தை நாம் நாம் ரேஷன் கடைகளில் சென்று தான் வாங்கிக் கொள்ள வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் முதல் கட்டமாக விநியோகம் செய்யப்படும் . அதில் உங்கள் ரேசன் அட்டைக்கு பொங்கல் பரிசு கிடைக்கும் நாள், நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும்.
பொதுவாக ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன்களை விநியோகம் செய்வார்கள். கடந்த பொங்கல் பண்டிகைக்கு இந்த டோக்கன்கள் விநியோகம் என்பது ஜனவரி 3ஆம் தேதியே தொடங்கியது.இந்த பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. ஜனவரி 1ஆம் தேதி வியாழக்கிழமை விடுமுறை என்பதால் ஜனவரி 2ஆம் தேதியான வெள்ளிக்கிழமை முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொங்கலின்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஜனவரி 9ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார் இந்த முறையும் 2ஆம் தேதியில் இருந்து டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு 9ஆம் தேதியில் இருந்து பொங்கல் பரிசு தொகுக்கு விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுகிழமைகளில் கூட பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கும் வினியோகம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications