இந்த பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைக்குமா? ஆவலுடன் எதிர்பார்க்கும் ஊழியர்கள்!

பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் பொங்கல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் வெளியூர்களில் வேலை செய்பவர்களும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி சொந்த பந்தங்களோடு பொங்கல் வைத்து கொண்டாடும் நிகழ்வாக இது இருக்கிறது. அதோடு ஒவ்வொரு ஊர்களிலும் விளையாட்டு போட்டிகள் நடத்துதல், குடும்பங்கள் சேர்ந்து வெளியே செல்லுதல் என ஊரே கலை கட்டும்.

அப்படி இருக்கையில் இந்த முறையும் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல பலர் விடுமுறையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஜனவரி 13-ஆம் தேதி முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை விடுமுறை வழங்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தொடர்ந்து 9 நாள் விடுமுறை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

 இந்த பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைக்குமா? ஆவலுடன் எதிர்பார்க்கும் ஊழியர்கள்!

தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாட மக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையிலிருந்து மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். இந்த ஆண்டும் பொங்கல் விழா அதே உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 1 வாரமே உள்ள நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயணிக்க வேண்டி சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களும் சொந்த வாகனங்களில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி திங்கட்கிழமையும் பொங்கலுக்குப் பிறகு ஜனவரி 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒருவேளை ஜனவரி 13-ஆம் தேதி மற்றும் 17 ஆகிய தேதிகளில் விடுமுறை வழங்கப்பட்டால் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது தொடர்பாக பல்வேறு குழுக்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். SDPI கட்சியின் மாநில தலைவரான நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் 16-ஆம் தேதி வியாழன் வரை மூன்று நாட்கள் கொண்டாடப்படும். எனவே ஜனவரி 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தமிழக அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதோடு ஜனவரி 18 மற்றும் 19 சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வருகிறது. எனவே பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு கூடுதல் நாட்களுக்கு தங்கள் ஊரிலேயே தங்கும் வகையில் இந்த விடுமுறை அமையும். இதை எதிர்பார்த்து தான் பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+