பொங்கல் பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வரும் முக்கியமான விஷயம் ஜல்லிக்கட்டு. காலம் காலமாக தமிழரின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கும் ஜல்லிக்கட்டில் கடந்த சில வருடங்களாக அதிகப்படியானோர் கலந்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருவது பாராட்டப்பட கூடியதாக உள்ளது.
இந்த விளையாட்டை ஊக்குவிக்க மதுரையில் அலங்காநல்லூருக்கு அருகில் உள்ள கீழக்கரையில் ஜல்லிக்கட்டுக்கென பிரத்தியேகமாக தமிழ்நாடு அரசு அமைக்கப்பட்டுள்ள நவீன மைதானத்தை தொடர்ந்து 2வது மைதானம் திருச்சியில் திறக்கப்பட தயாராகி வருகிறது.

தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நிரந்தர மைதானம் கட்டும் முயற்சியில் மற்றொரு மைல்கல் நிகழ்வாக இதை பார்க்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் பகுதியில் உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானம் ஜனவரி 15, 2026 அன்று பொங்கல் திருநாள் அன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இங்கு ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இக்கிராம மக்கள் நீண்டகாலமாக நிரந்தர மைதானம் கோரி வந்த நிலையில், அரசு இந்த கோரிக்கையை ஏற்று 3 கோடி ரூபாய் செலவில் மைதானத்தை அமைத்துள்ளது.
இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. விழாவிற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மைதானத்தை பார்வையிட்டார். பணிகளை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மைதானத்தை திறந்து வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் டிவிட்டர் பதிவு வாயிலாக தெரிவித்தார். இந்த நிகழ்வு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிப்பதோடு, கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையையும் நிறைவேற்றும் முக்கிய நிகழ்வாக அமையவுள்ளது. இதுக்குறத்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டு உள்ளார்.

2026-ஆம் ஆண்டு தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக மதுரை மாவட்டத்தின் மூன்று முக்கிய இடங்கள் உலகப் புகழ்பெற்றவை. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 15 தேதி நடைப்பெறும் (தைப்பொங்கல் அன்று), பாலமேடு ஜல்லிகட்டு ஜனவரி 16 தேதி நடைப்பெறும் (மாட்டுப் பொங்கல் அன்று), அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17 தேதி நடைப்பெறும் (காணும் பொங்கல் அன்று).
இதை தொடர்ந்து புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு நடந்து முடிந்த நிலையில் இனி மதுரை தொடர்ந்து அடுத்தடுத்து பல மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications