நாகை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் கரும்பு ஆகியவற்றோடு 1000 ரூபாய் ரொக்கமும் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்னரே மக்கள் கைகளுக்கு இந்த பணம் மற்றும் தொகுப்பு சென்று சேர்ந்திடும் வகையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும். வழக்கமாக ரேஷன் கடைகள் மூலம் தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பொங்கல் பரிசு தொகுப்பும் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 22 நாட்களே இருக்கக்கூடிய சூழலில் பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது முதல் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.
கடந்தாண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றோடு 1000 ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்பட்டது. அத்துடன் இலவச வேட்டி சேலையும் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் பொங்கல் பரிசு தொகை குறித்த முக்கியமான ஒரு தகவலை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிவித்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் கூறினார்.
எனவே ஜனவரி மாத தொடக்கத்திலேயே டோக்கன் வினியோகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகள் தரப்பில் பொங்கல் பரிசு தொகுப்போடு சர்க்கரைக்கு பதிலாக வெள்ளம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அரசு ஏதேனும் முடிவெடுத்துள்ளதா என்பன உள்ளிட்ட விவரங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடக்கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரியவரும். ஏற்கனவே 1000 ரூபாய் பணத்தை ரேஷன் அட்டைதாரர்களிடம் வழங்காமல் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
வரும் ஜனவரி 13ஆம் தேதி போகிப் பண்டிகையும், ஜனவரி 14-ஆம் தேதி தை பொங்கலும் கொண்டாடப்பட இருக்கிறது. இதில் ஜனவரி 13ஆம் தேதி போகிப் பண்டிகைக்கு முன்னர் சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறை தினமாக இருக்கிறது. எனவே அதற்கு முன்னதாகவே பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications