ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2 சர்ப்ரைஸ்.. பொங்கல் பரிசோடு ரூ.199-க்கு 7 பொருட்கள் கிடைக்கபோகுது!

பொதுவாக நம் நாட்டில் பண்டிகை காலங்கள் வந்துவிட்டால் ஒவ்வொரு ஊரும் கலை கட்டும். அந்த வகையில் பொங்கல் பண்டிகை என்றால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வர். இந்நிலையில் ஏற்கனவே 1000 ரூபாய் தொகையும் பொங்கல் பரிசையும் அறிவித்துள்ள தமிழக அரசு தற்போது கூடுதலாக நுகர்வோருக்கு மலிவு விலையிலான தரமான பொருட்கள் கிடைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு சில்லறை விற்பனைக் கடைகளில் பொங்கல் சிறப்பு விற்பனையை துவங்கியுள்ளது.

வருகின்ற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக் காலம் என்பதால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ஒரு புதிய சலுகை கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைக்கேற்ப கூட்டுறவுத் துறையின் மூலம் "கூட்டுறவுப் பொங்கல்" என்ற பெயரில் பொதுமக்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பொங்கல் தொகுப்பு விற்பனையைத் தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் டிசம்பர் 19, 2024 அன்று தொடங்கி வைத்தார்.

 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2 சர்ப்ரைஸ்.. பொங்கல் பரிசோடு ரூ.199-க்கு 7 பொருட்கள் கிடைக்கபோகுது!

சென்னை தேனாம்பேட்டை TUCS காமதேனு கூட்டுறவுத் துறையின் மூலம் இந்த விற்பனை முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டது. இந்தப் பொங்கல் தொகுப்பு விற்பனையின் மூலம் இனிப்புப் பொங்கல் தொகுப்பு, கூட்டுறவு சிறப்புப் பொங்கல் தொகுப்பு, பெரும் பொங்கல் தொகுப்பு என்று 3 வகையான பொங்கல் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 3 தொகுப்புகளின் விலைக்கு ஏற்றவாறு பொருட்கள் வழங்கப்படும்.

இனிப்புப் பொங்கல் தொகுப்பு: இனிப்புப் பொங்கல் தொகுப்பின் கீழ் பச்சரிசி 500 கிராம், பாகு வெல்லம் 500 கிராம், முந்திரி 50 கிராம், ஏலக்காய்-5 கிராம், ஆவின் நெய்-50 கிராம், உலர் திராட்சை-50 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம் என்று 7 பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன. இந்தத் தொகுப்பு ரூ. 199 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கூட்டுறவு சிறப்புப் பொங்கல் தொகுப்பு: கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பின் கீழ் சர்க்கரை 500 கிராம், மஞ்சள் தூள் 50 கிராம், துவரம் பருப்பு 250 கிராம், கடலைப்பருப்பு 100 கிராம், உளுத்தம்பருப்பு 250 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம், உப்பு 1 கிலோ, மிளகாய் 250 கிராம், தனியா 250 கிராம், பொட்டுக்கடலை 200 கிராம், புளி 250 கிராம், மிளகாய்த்தூள் 50 கிராம், செக்கு கடலை எண்ணெய் 1/2 லிட்டர், கடுகு 100 கிராம், சீரகம் 50 கிராம், வெந்தயம் 100 கிராம், மிளகு 25 கிராம், பெருங்காயம் 25 கிராம், சோம்பு 50 கிராம் என 19 பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்தத் தொகுப்பு ரூ. 499 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பெரும் பொங்கல் தொகுப்பு: பெரும் பொங்கல் தொகுப்பின் கீழ் சர்க்கரை 500 கிராம், மஞ்சள் தூள் 50 கிராம், உப்பு 1 கிலோ, உளுத்தம்பருப்பு 250 கிராம், துவரம்பருப்பு 250 கிராம், கடலைப்பருப்பு 200 கிராம், பாசிப்பருப்பு 150 கிராம், பச்சைப்பட்டாணி 100 கிராம், வெள்ளை சுண்டல் 200 கிராம், வேர்க்கடலை 200 கிராம், வர மிளகாய் 250 கிராம், பொட்டுக்கடலை 200 கிராம், புளி 200 கிராம், கடுகு 100 கிராம், தனியா 250 கிராம், மிளகு 50 கிராம், சீரகம் 50 கிராம், சோம்பு 50 கிராம், வெந்தயம் 100 கிராம், ஏலக்காய் 5 கிராம், செக்கு கடலை எண்ணெய் 1/2 லிட்டர், வரகு 500 கிராம், திணை 500 கிராம், சாமை 100 கிராம், ரவை 500 கிராம், அவல் 250 கிராம், ராகி மாவு 500 கிராம், கோதுமை மாவு 500 கிராம், ஜவ்வரிசி 200 கிராம், மல்லித்தூள் 50 கிராம், சாம்பார் தூள் 50 கிராம், வறுத்த சேமியா 170 கிராம், மிளகாய்த்தூள் 50 கிராம், பெருங்காயத்தூள் 25 கிராம் என 34 பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்தத் தொகுப்பு ரூ. 999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பெரும் பொங்கல் தொகுப்போடு 1/2 கிலோ நாட்டுச்சர்க்கரை இலவசமாக வழங்கப்டுகிறது.

இந்த 3 தொகுப்புகளும் வெளியில் கிடைப்பதை விட விலைக் குறைவாகவே விற்கப்படுகிறது. ஆகையால், கூட்டுறவுத் துறையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவைப் பிரிவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து நிலையங்களிலும் "கூட்டுறவுப் பொங்கல்" என்ற பெயரில் பொங்கல் தொகுப்புகளை வாங்கிக் கொள்ளலாம்.

ஏற்கனவே ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையோடு சேர்த்து 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக கிடைக்கவுள்ளது. இந்நிலையில் தற்போது கூட்டுறவு நிலையங்களில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த 3 தொகுப்புகளும் மக்களுக்கு இன்னும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த பொங்கலுக்கு தமிழக அரசு 2 மகிழ்ச்சி செய்திகளை வெளியிட்டுள்ளது

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+