சென்னை: பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல.. ஆண் குழந்தைகளுக்கும் சில சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது தான், இந்த பொன்மகன் சேமிப்புத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களைப் பற்றிப் பார்ப்போம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் ஆண் குழந்தைகளுக்கும் ஒரு திட்டம் உள்ளது என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா? ஆண் குழந்தைகளின் நலனுக்காக, இந்திய அஞ்சல் துறையால், இந்த பொன்மகன் சேமிப்புத் திட்டம் செய்லபடுத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பொன்மகன் சேமிப்பு திட்டத்திற்கு நீங்கள் போஸ்ட் ஆபீஸ்களில் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச தொகையாக ரூ. 500 முதல் அதிகபட்ச தொகையாக ரூ. 1,50,000 வரை, இந்தத் திட்டத்தில் சேமிக்க முடியும்.
மாதம் மாதம் இந்தத் திட்டத்திற்கு நீங்கள் வரவு வைக்க முடியும். பொன்மகன் சேமிப்புத் திட்டத்தின் லாக் இன் காலம் 15 ஆண்டுகள். அதுவரை தொடர்ந்து மாதம் மாதம் நீங்கள் சேமிக்கலாம். தற்போது பொன்மகன் சேமிப்புத் திட்டத்திற்கு 8.1 % வட்டி அளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம்?: பொன்மகன் சேமிப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கிடையாது என்று கூறப்படுகிறது. பிறந்த குழந்தைகள் முதல் விண்ணப்பிக்கலாம். ஆண் குழந்தைகள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:
1. ஆண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
2. முகவரி தொடர்பான ஆவணங்கள்
3. ஆதார் கார்டு
4. பான் கார்டு மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகியவை தேவைப்படும்
இந்த திட்டத்திற்கான லாக்கின் காலம் 15 ஆண்டுகள். ஆனால் தேவைப்பட்டால் ஏழு ஆண்டுகளில் 50 % தொகையை நீங்கள் பெற முடியும்.
பொன்மகன் சேமிப்பு திட்டத்தில், தேவைப்பட்டால் உரிய காரணத்துடன் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் 7 ஆண்டுகளுக்குப் பிறகு 50 சதவீத தொகையையும் பெற முடியும்.
எங்கு விண்ணப்பிக்கலாம்?: பொன்மகன் சேமிப்பு திட்டத்திற்கு அருகில் உள்ள தபால் நிலையங்களில் விண்ணப்பிக்கலாம். தேவைப்பட்டால் அந்த கணக்கை எங்கு வேண்டுமானாலும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். குழந்தையின் வயது 10 வயதிற்கு உட்பட்டதாக இருந்தால், பெற்றோரின் பெயரில் கணக்கைத் தொடங்கலாம். 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு, அந்த குழந்தையின் பெயரிலேயே நிர்வகிக்கலாம். மேலும் மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை சேர்த்து, தபால் நிலையங்களில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications