சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் நோக்கத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்ற வருகின்றன . மெட்ரோ ரயில்கள் நம்முடைய பயணத்தை விரைவாக்குவதோடு மட்டுமில்லாமல் எந்த போக்குவரத்து நெரிசலிலும் சிக்காமல் குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்வதற்கு உதவியாக இருக்கின்றன.
சென்னையில் ஏற்கனவே முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளை மெட்ரோ சேவையுடன் இணைக்கும் வகையில் அரசு அடுத்தடுத்த மெட்ரோ ரயில் பணிகளை அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் கழகம் இந்த கட்டுமான பணிகளை மேலாண்மை செய்கிறது.

தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதில் முதல்கட்டமாக பூந்தமல்லி பைபாஸ் முதல் போரூர் சந்திப்பு வரையிலான மெட்ரோ ரயில் பாதையில் கட்டுமான பணிகள் நடந்து முடிந்துவிட்டன. விரைவில் இந்த பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது. இதற்கான பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது .
ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கிய இந்த சோதனை ஓட்டம் பூந்தமல்லி பைபாஸ் தொடங்கி போரூர் சந்திப்பு வரையிலான மேம்படுத்தப்பட்ட வழித்தடத்தில் நடத்தப்பட்டது. ஆய்வு வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு, மத்திய ரயில்வே துறையின் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தி இருக்கின்றனர் . இந்த சோதனை ஓட்டம் முடிந்த பிறகு இந்த பாதையில் மெட்ரோ ரயில் இயக்குவது பாதுகாப்பானது என்பதற்கான தரச் சான்றிதழ்களை தருவார்கள் . இந்த தர சான்றிதழ் தந்த பிறகு இந்த பாதையில் அதிகாரப்பூர்வமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.
2 வாரங்களுக்கு சோதனை ஓட்டம் நடக்கும் என்றும் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கி பார்க்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சோதனை ஓட்டத்தின் போது மெட்ரோ ரயில்களை பல வேகங்களில் இயக்கி சோதனை செய்து பார்ப்பார்கள் . ரயில் இழுவை எப்படி இருக்கிறது, வேகத்தை மாற்றும்போது ரயிலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா , ரயிலின் பயணிகளுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்படுகிறதா என்பன உள்ளிட்ட அனைத்தும் இதில் பரிசோதனை செய்து பார்க்கப்படும்.
உயர்ந்த பாதுகாப்பு தரத்தோடு மக்களுக்கு ஒரு சிறந்த மெட்ரோ சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை மெட்ரோ ரயில் கழகம் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது என சென்னை மெட்ரோ ரயில் கழகம் தெரிவித்திருக்கிறது. அடுத்த இரண்டு வார காலங்களுக்குள் இந்த தரச் சான்றிதழ் வழங்கும் பணி முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு கூடிய விரைவிலேயே இங்கே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications