பூனாவல்லா ஃபின்கார்ப்பின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி திராஜ் சக்ஸேனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை இந்த நிதியியல் நிறுவன பங்குகள் 3% க்கும் அதிகமாக சரிந்து ரூ.342 க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவின் பிரபலமான NBFC நிறுவனமான பூனாவல்லா ஃபின்கார்ப், தலைமைத்துவ மாற்றங்கள் மற்றும் நிறுவனத்தின் உள் குழப்பங்களுடன் போராடி வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான திராஜ் சக்ஸேனாவின் சமீபத்திய ராஜினாமா நிறுவனத்தின் இயக்கவியல் குறித்த கவலைகளை முதலீட்டாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

செப்டம்பர் 6 ஆம் தேதி திராஜ் சக்ஸேனா சமர்ப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தில், தலைமை மனிதவள அதிகாரி (CHRO)யின் "தொந்தரவு மற்றும் தேவையற்ற தலையீடுகள்" தனது வெளியேறும் முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார். மேலும், CHRO-யின் செயல்கள் ஐடி பிரிவின் இயக்கத்தை குழப்பி, ஐடி குழுவிற்குள் பதற்றமான சூழலை உருவாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சக்ஸேனாவின் ராஜினாமா, பூனாவல்லா ஃபின்கார்ப்பில் உயர்மட்ட நிர்வாகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அர்விந்த் கபில் ஜூன் 2024 இல் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவாக நிறுவனத்தில் சேர்ந்தார், அதே நேரத்தில் ஹர்ஷ் குமார் ஜூலை 2024 இல் CHRO பதவியை ஏற்றார்.
இவ்விருவரும் நிறுவனத்திற்கு புதியவர்கள் என்பதாலும், NBFC நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் டெக் பிரிவின் தலைவர் வெளியேறியதும் முதலீட்டளர்களுக்கு இந்நிறுவனத்தின் வளர்ச்சி மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் வாயிலாவே பூனாவல்லா ஃபின்கார்ப் பங்கு விலை பெரிய அளவில் குறைந்துள்ளது.
மக்மா ஃபின்கார்ப் என்றழைக்கப்பட்ட இந்த நிறுவனம் 2021 ஜூலையில் அதார் பூனாவாலாவின் ரைசிங் சன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. பின்னாளில் பூனாவல்லா ஃபின்கார்ப் ஆக மாறிய கார்ப்ரேட் ஊழியர்களுக்கான கடன் வழங்குவதில் தனிப்பட்ட கவனத்தை செலுத்தி சந்தையில் வேகமாக வளர்ச்சி அடையை துவங்கியது.


Click it and Unblock the Notifications