பங்குச்சந்தை முதலீட்டில் லாபம் கிடைப்பது என்பது அதிர்ஷ்டம் என பலரும் கூறுவதுண்டு, ஆனால் இதுவொரு கணக்கு. எப்போது, எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதை கணிக்க பல காரணிகளை கொண்டு சந்தை நிலவரத்தையும், சந்சையின் போக்கையும் வைத்து ஆய்வு செய்ய வேண்டும். இப்படி பல கோணத்தில் ஆய்வு செய்து முதலீடு செய்தாலும் பல நேரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. எதிர்பாராத இடத்தில் இருந்து பண மழை கொட்டும்.
இப்படி வெறும் 1 லட்சம் ரூபாயை 3 வருடத்திற்கு முன்பு முதலீடு செய்திருந்தால் சுமார் 22 லட்சம் ரூபாய் லாபத்தை ஒரு பங்கு கொடுத்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பிற்கு பின்பு பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த வெகு சில நிறுவனங்களில் பூனாவல்லா ஃபின்கார்ப் நிறுவனமும் ஓன்று. கடந்த மூன்று ஆண்டுகளில் பூனாவல்லா ஃபின்கார்ப் நிறுவன பங்குகள் இந்திய பங்குச் சந்தையில் முக்கிய மல்டிபேக்கர் பங்குகளாக உள்ளது.
கோவிட்-19 தொற்று காலத்தில் அதிகப்படியான பங்கு விற்பனையை அடுத்து, இந்த நிதியியல் சேவை பங்கு 29 மே 2020 அன்று தேசிய பங்குச்சந்தையில் ஒரு பங்கு 13.35 ரூபாய் விலைக்கு சரிந்தது மோசமான பாதிப்பை பதிவு செய்தது. இந்த நிலையில் கோவிட் தொற்று பாதிப்பில் இருந்து பங்குச்சந்தை மீள துவங்கிய நாளில் இருந்து அதிகப்படியான லாபத்தை கொடுக்க துவங்கியது.
இந்த நிலையில் இன்று பூனாவல்லா ஃபின்கார்ப் பங்குகள் சுமார் 293 ரூபாய் விலையில் அசத்தி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் பூனாவல்லா ஃபின்கார்ப் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 2100 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 29 மே 2020 அன்று 1 லட்சம் ரூபாயை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தால் இன்று 22 லட்சம் ரூபாய்.

பூனாவல்லா ஃபின்கார்ப் பங்குகள் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்த நிலையில் முதலீட்டாளர்கள் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகளை விற்பனை செய்ய துவங்கினர். இதனால் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 4 சதவீதம் சரிந்துள்ளது.
பூனாவல்லா ஃபின்கார்ப் பங்குகளில் புதிதாக முதலீடு செய்ய திட்டமிடுவோர் கவனிக்க வேண்டிய முக்கியமாக இடம் இது. பூனாவல்லா ஃபின்கார்ப் பங்குகளின் விலை நீண்ட கால அடிப்படையில் 415 ரூபாய் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் அதன் பங்குதாரர்களுக்கு 40 சதவீதத்திற்கும் அதிகமான வருமானம் கிடைக்கும்.

பூனாவல்லா ஃபின்கார்ப் பங்குகள் மும்பை பங்குச்சந்தையிலும், உள்ளது, தேசிய பங்குச்சந்தையிலும் உள்ளது. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் 0.34 சதவீதம் சரிவில் 290.05 ரூபாயாக உள்ளது. சுமார் 22,280 கோடி ரூபாய் சந்தை மதிப்பீடு உடன் இருக்கும் பூனாவல்லா ஃபின்கார்ப் பங்குகளின் 52 வார உயர்வு என்பது 343.75 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications