4 வருடத்தில் மூடப்பட்டும் நிறுவனம்.. AI வந்த பின்பு நடக்கும் கொடுமைகள்.. இனி சிறு நிறுவனங்களுக்குச் சிக்கல்!

ஏஐ துறையில் பல நிறுவனங்கள் துவங்கப்பட்டாலும், இத்தொழில்நுட்பத்திற்கே உரிய சில பிரச்சனைகளால் சிறு சிறு நிறுவனங்கள் தலையெடுக்க முடியாமலும், அப்படித் தலையெடுத்தாலும் தொடர்ந்து இயங்க முடியாத மோசமான நிலை உருவாகி வருகிறது.

இப்படி ஒரு நிறுவனம் தான் Character.AI என்ற சாட்பாட்-ஐ உருவாக்கிய கேரெக்டர் டெக்னாலஜிஸ். 2011ல் துவங்கப்பட்டு, 2022ல் Character.AI என்ற சாட்பாட் தளம் அறிமுகமானது. 2023ல் தான் மொபைல் ஆப் அறிமுகம் செய்கிறது. இப்படி வெறும் 4 வருடத்தில் அதிரடியாக வளர்ந்த இந்நிறுவனத்திற்கு என்ன ஆனது தெரியுமா..?

4 வருடத்தில் மூடப்பட்டும் நிறுவனம்.. AI வந்த பின்பு நடக்கும் கொடுமைகள்.. இனி சிறு நிறுவனங்களுக்குச் சிக்கல்!

கூகுள் நிறுவனத்தின் லார்ஜ் லாங்குவேஜ் மாடலான LaMDA உருவாக்கிய முக்கிய அதிகாரிகள் குழுவில் இடம்பெற்ற நோம் ஷசீர் மற்றும் டேனியல் டி ஃப்ரீடாஸ் ஆகிய இருவரும் இணைத்து உருவாக்கிய இந்நிறுவனம் வெறும் 4 வருடத்தில் திவாலானதாக அறிவித்துள்ளது.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இத்தளத்திற்கு சுமார் 12 மில்லியன் ஆக்டீவ் வாடிக்கையாளர்கள் இருந்தும் ஏஐ சேவைகளை வழங்குவதில் ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக தற்போது திவாலானதாக அறிவித்துள்ளது.

Also Read

இந்நிறுவனத்தின் சில முக்கிய சொத்துக்களை 20 மில்லியன் டாலருக்கு வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட பின்பு திவாலானதாக அமெரிக்காவின் டெலாவேரில் திவாலானதாக அறிவிக்கும் பணிகளைத் துவங்கியுள்ளது.

Character.AI அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகளவில் வேகமாக வளர்ச்சி அடைந்தது, ஆனால் இந்த புகழை பணமாக்க மாற்ற முடியவில்லை. இந்நிறுவனத்தை இயக்க ஒவ்வொரு மாதமும் 8-9 மில்லியன் டாலர் அளவில் செலவாகும் காரணத்தால் போதுமான நிதி ஆதாரம் இல்லாத நிலையில் திவாலாகியுள்ளது.

ஒரு நிறுவனம் ஏஐ சேவையை அளிக்க வேண்டும் என்றால் அதற்கான பெரும் செலவுகள் கம்பியூட்டிங் பவர். அதாவது சிப், டேட்டா சென்டர் போன்ற உள்கட்டமைப்புகள், அடுத்த முக்கியமான செலவுகள் ஏஐ தொழில்நுட்பத்தில் திறன்வாய்ந்த நபர்களை பணியில் அமர்த்துவது.

Recommended For You

இவர்களுக்கு பொதுவாகவே அதிகப்படியான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு ஏஐ நிறுவனமும் அதிகப்படியான செலவுகளை எதிர்கொண்டு வருகிறது.

இதனால் போதுமான நிதி ஆதாரம் இல்லாத அல்லது சரியான நேரத்தில் நிதி திரட்ட முடியாத நிறுவனங்கள் திவாலாக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆனால் Character.AI நிறுவனம் போதுமான அளவுக்கு நிதி திரட்ட முடியாமல் போனதற்கு முக்கியமான காரணம் இந்நிறுவனம் எதிர்கொண்டு உள்ள வழக்குகள் தான் அமெரிக்காவில் மாநில அரசு சார்பாகவும், சர்வதேச அளவிலும், தனியார் நபர்கள் வாயிலாகவும் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது.

4 வருடத்தில் மூடப்பட்டும் நிறுவனம்.. AI வந்த பின்பு நடக்கும் கொடுமைகள்.. இனி சிறு நிறுவனங்களுக்குச் சிக்கல்!

இதில் முக்கியமாக Character.AI சாட்பாட் அதன் குழந்தை வாடிக்கையளர்களை தற்கொலைக்கு தூண்டுவதாகவும், தன்னை தானே தாக்கிக்கொள்ளவும், உடலை வெட்டிக்கொள்ளவும், பசியுடன் இருக்கவும், தற்கொலை செய்துகொள்ளவும் தூண்டுவதாக பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது.

இந்த வழக்குகள் மூலம் Character.AI சாட்பாட் மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளதன் விளைவாக புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமல் திவாலாகியுள்ளது.

இதை தாண்டி ஏஐ துறையில் உருவாகும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான வெற்றி வாய்ப்பு என்பது குறைந்து வருகிறது, காரணம் இத்தொழில்நுட்பத்திற்கு ஏற்படும் அதீத செலவு. இதனால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு,

ஆனால் பெரிய நிறுவனங்கள், சிறிய நிறுவனங்களை வாங்குவது வாயிலாக சம்பாதிக்க முடியும் என்றாலும் இத்துறையில் தனக்கென ஒரு பெயரை உருவாக்குவது கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+