நம்பர் பிளேட் இல்லை.. டாக்குமெண்டுகள் இல்லை.. 9.8 லட்சம் அபராதம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாகவே, நமக்கு விலை உயர்ந்த சொகுசு கார்கள் என்றால் ஆடி, பி எம் டபிள்யு, மெசிடஸ் பென்ஸ், பார்ஸ், மசரட்டி, ஃபெராரி போன்ற கார்கள் தான் நினைவுக்கு வரும். இப்போது மேலே தலைப்பில் சொன்ன படி 9.8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதும், இது போன்ற ஒரு காஸ்ட்லி சொகுசு காருக்குத் தான்.

பார்ஷ் (Porsche) நாம் அதிகம் கேள்விப்பட்ட காஸ்ட்லியான கார்களில் இதுவும் ஒன்றும். கடந்த நவம்பர் 27, 2019 புதன் கிழமை, குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அஹமதாபாத்தில் ஒரு பார்ஷ் (Porsche) கார் காவலர்களிடம் சிக்கி இருக்கிறது.

நம்பர் பிளேட் இல்லை.. டாக்குமெண்டுகள் இல்லை.. 9.8 லட்சம் அபராதம்..!

அஹமதாபாத்தில் ஹெல்மட் க்ராஸ் ரோட்டில் காவல் துறை துணை ஆணையர் தேஜஸ் படேலிடம் தான் இந்த காஸ்ட்லி கார் சிக்கி இருக்கிறது. சிக்கிய கார் பார்ஷ் (Porsche) 911 ரக கார். இந்த பார்ஷ் 911 ரக காரின் விலை சுமாராக 2 கோடி ரூபாயாம். காரை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரித்த போது, தகுந்த டாக்குமெண்டுகள் இல்லை. அதோடு நம்பர் பிளேட்களும் இல்லை.

எனவே மோட்டார் வாகனச் சட்டப் படி, காரை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டார்கள் காவலர்கள். அதோடு நம்பர் பிளேட் இல்லாமலும், தகுந்த டாக்குமெண்டுகள் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதற்காகவும் 9.8 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறார்களாம்.

இப்போது பார்ஷ் (Porsche) காரின் உரிமையாளர் முறையாக 9.8 லட்சம் ரூபாய் அபராதத்தைச் செலுத்தி, காவல் துறையினரிடம் முறையாக ரசீதுகளைக் காண்பித்தால் தான், அந்த விலை உயர்ந்த பார்ஷ் (Porsche) காரை மீண்டும் ஓட்டு முடியும். இல்லை என்றால் அதுவரை, கார் காவலர்களின் பிடியில் தான் இருக்குமாம்.

என்னங்க இது, 2 கோடி ரூபாய் கொடுத்து காரை எல்லாம் வாங்கி இருக்கிறார். ஒரு 1,000 ரூபாய் செலவழித்து நம்பர் பிளேட் + மேலும் சில ஆயிரங்களை செலவு செய்து காருக்குத் தேவையான எல்லா டாக்குமெண்டுகளையும் முறையாக தயார் செய்து இருக்கலாமே..? அந்த வேலையை ஒழுங்காகச் செய்யாமல் விட்டு விட்டு, இப்போது இப்படி காரை காவலர்கள் பிடியில் விட்டு விட்டார்களே..! ஆக நண்பர்களே 2 கோடி ரூபாய்க்கு கார் வாங்குவதை விட, அதற்கு தேவையான டாக்குமெண்ட்கள் மற்றும் நம்பர் பிளேட்களை வாங்குவது மிக அவசியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: car fine அபராதம்
English summary

Porsche 911 car fined 9.8 lakh for not having number plate and other documents

In Ahmadabad, Gujarat, Porsche 911 model car had fined by police for Rs. 9.8 lakh for not having number plate and other documents with the vehicle
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X