பணிநீக்கம், கடந்த 6 மாதங்களாக அனைத்து துறைகளிலும், நிறுவனங்கள் செலவை குறைக்கும் விதமாக தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகிறது. ஒருபக்கம் ஏஐ, மறுபக்கம் நிதி நெருக்கடி என ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகிறது. இதனால் டெக் ஊழியர்கள், ஆப்ரேஷன்ஸ் ஊழியர்கள், நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும் இந்த பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாட்டின் டெக் நகரமான பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லாஜிஸ்டிக்ஸ் தளமான போர்டர் நிறுவனம், செலவுகளை குறைக்கும் விதமாக 300 முதல் 350 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இந்த அறிவிப்பு இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஏற்கனவே இந்திய நிறுவனங்களில் சைலெண்ட் லேப்ஆஃப் அதிகமாக இருக்கும் வேளையில், பல நிறுவனங்கள் வெளிப்படையாகவே கொத்துக்கொத்தாக ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் வேகமாக மாறி வரும் இந்த சூழ்நிலையில் நிறுவனங்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ளவும், திவால் ஆகாமல் தப்பிக்கவும் என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
இதே சூழ்நிலையில் தான் போர்டர் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் இந்நிறுவனம் ஐபிஓ வெளியிட தயாராகி வரும் காரணத்தால் செலவுகளை குறைத்து லாபத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
போர்டர் நிறுவனம் இந்த பணிநீக்கம் குறித்து கூறுகையில், "நாங்கள் பலமான, விரைவான, நிதி உறுதியான அமைப்பை உருவாக்கும் மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கடினமான முடிவுகளை எடுத்துள்ளோம்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போர்டர் நிறுவனம், இந்தியாவின் ஆன்-டிமாண்ட் லாஜிஸ்டிக்ஸ் தளமாக வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால் தற்போது ஐபிஓ வெளியிட திட்டமிட்டு வருவதால் செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளது. இதேவேளையில் லாஜிஸ்டிக்ஸ் துறையில் போட்டி அதிகரித்து, நிதியியல் ரீதியான பாதிப்புகளும் அதிகரித்துள்ளது.
போர்டர் நிறுவனம் கூறுகையில், "இந்த பணிநீக்க முடிவுகளை நிர்வாகம் எளிதாக எடுத்துவிடவில்லை, கவனமான கணக்கீடு, பலகட்ட ஆலோசனைக்கு பிறகே எடுக்கப்பட்டன" என்று கூறியுள்ளது. இந்த பணிநீக்கங்கள், நிறுவனத்தின் நிதி நிலையை உறுதி செய்யும் அதேபோல் ஐபிஓவுக்கு தயாராக்கும்.
இதேபோல் போர்டர் நிறுவனம் எத்தனை பேரை பணிநீக்கம் செய்துள்ளது என வெளிப்படையாக அறிவிக்கவில்லை, ஆனால் எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையிடம் விபரம் தெரிந்த நபர்கள் இந்த பணிநீக்கத்தில் 300-350 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications