தீபாவளி முடிந்தது.. விலையை உயர்த்த வேண்டிய நேரம் வந்தாச்சு..!!

இந்தியா முழுவதும் வர்த்தகர்கள் நவராத்திரி, தீபாவளி பண்டிகை வர்த்தகத்திற்காக, உற்பத்தி விலை அதிகரித்த போதிலும், சப்ளை செயின் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும் விலையை உயர்த்தாமல் இருந்தது.

பண்டிகை கால வர்த்தகம் முடிந்த நிலையில் கடந்த 2 வாரத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் தனது விலையை படிப்படியாக உயர்த்தியுள்ளது.

தீபாவளி முடிந்தது.. விலையை உயர்த்த வேண்டிய நேரம் வந்தாச்சு..!!

இதில் முக்கியமாக இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்கள், தற்போது சந்தையில் விற்பனையில் இருக்கும் 41 மாடல்களின் விலையை சுமார் 18.75 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது.

ஏற்கனவே மெமரி சிப், பிராசர் விலை உயர்வு காரணமாக அனைத்து எலக்ட்ராகனிக்ஸ் பொருட்களின் விலையும் அதிகரித்திருந்த நிலையில், தீபாவளி விற்பனைக்குப் பின்பு மொத்த விலை சுமையும் வாடிக்கையாளர்கள் தலையில் விதித்துள்ளது ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்.

Also Read

புதிய விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் காரணத்தால் 1000 முதல் 4000 ரூபாய் வரையில் விலையை உயர்த்தியுள்ளது. தற்போது சாம்சங் கேலக்சி ஏ, எப் ஆகிய இரு சீரியஸ் போன்களும், சியோமியின் ரெட்மி-யின் 19 சீரியஸ் போன்களின் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது.

சாம்சங் தனது விலையை 3.13 சதவீதம் முதல் 9.52 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது, இதேபோல் சியோமி 4.26 சதவீதம் முதல் 18.75 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் விலையின் குறைந்தபட்ச அளவீடு 20000 ரூபாய் அளவீட்டை கடந்துள்ளது.

இந்திய சந்தையில் பெரும் வர்த்தக சந்தை கொண்ச சாம்சங், சியோமி விலை உயர்வு முடிவை எடுத்திருக்கும் வேளையில், அடுத்த சில நாட்களில் அல்லது வாரத்தில் ஓப்போ, விவோ, ரியல்மி ஆகியவை தனது ஸ்மார்ட்போனின் விலையை உயர்த்தும் என அறிவித்துள்ளது.

Recommended For You

இந்த விலை உயர்வு, ஏற்கனவே மந்தமாக இருக்கும் ரீடைல் ஸ்மார்ட்போன் விற்பனை சந்தைக்குக் கூடுதல் சுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மலிவான விலை அல்லது என்டரி லெவல் போன்களை வாங்க திட்டமிடும் மக்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் அதிர்ச்சியாகவும், சுமையாகவும் இருக்கும். இதனால் புதிய போன்களை வாங்குவதை பெரும் பகுதி மக்கள் தள்ளிப்போட வாய்ப்பு அதிகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+