மீண்டும் ஒரு வங்கியை வாங்க திட்டமிடும் எல்ஐசி.. சிஇஓ துரைசாமி சொன்ன முக்கிய விஷயம்!

இந்தியாவின் மிகப்பெரிய லைப் இன்சூரன்ஸ் நிறுவனமாக இருக்கும் எல்ஐசி தனது கட்டுப்பாட்டில் இருந்த ஐடிபிஐ வங்கியின் பெரும் பங்குகளை கனடா நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான Fairfax Financial Holdings வாங்க உள்ள நிலையில் எல்ஐசி நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்து ஐடிபிஐ வெளியேறுகிறது.

இந்த நிலையில் எல்ஜசி தனது சேவைகளை விர்வாக்கம் செய்து இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமாக உருவெடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளதாக எல்ஐசி நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.துரைசாமி தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஒரு வங்கியை வாங்க திட்டமிடும் எல்ஐசி.. சிஇஓ துரைசாமி சொன்ன முக்கிய விஷயம்!

தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் விதிமுறைகள் படி ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனம் இன்சூரன்ஸ் சேவை தனி கிளையாக கொண்டு இயக்கலாம். ஆனால் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் வங்கியை நிறுவுவதற்கோ அல்லது வங்கியின் ப்ரோமோட்டராக செயல்படவோ அனுமதியில்லை.

இதை காரணம் காட்டி பேசிய சிஇஓ துரைசாமி தற்போது எல்ஐசி வங்கியை துவங்க விதமுறைகள் அனுமதிக்கவில்லை, ஆனால் விதிகள் மாறினாலோ அல்லது கட்டமைப்பு மாறினாலோ கட்டாயம் வங்கி துறையில் இறங்குவதற்கான பணிகளை இறங்க தயார்.

இதேவேளையில் எல்ஐசி நிர்வாகம் தற்போது தனது எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் வாயிலாக வங்கியை கைப்பற்றம் திட்டத்தில் இறங்கியுள்ளதாக தெரிவித்தார் சிஇஓ துரைசாமி.

மேலும் மத்திய அரசு செபி விதிகளுக்கு இணங்க பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச பொது சந்தை பங்கீடு விதிமுறையைப் பூர்த்தி செய்ய, 4 பொதுத்துறை வங்கிகளில் பெரும் பகுதி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. தற்போது IDBI வங்கியில் விற்கப்பட்ட பங்குகளின் மூலம் கிடைத்த நிதியை கொண்டு 4ல் ஒரு வங்கியை வாங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது என சந்தையில் கருக்து நிலவுகிறது.

இந்தியாவில் இன்சூரன்ஸ் துறையில் சமீப காலமாக பல்வேறு வரி மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது, இதேபோல் தனியார் பிரிவில் இருந்தும் அதிகப்படியான போட்டியை எதிர்கொண்டு வருகிறது எல்ஐசி.

ஆயினும் 70 வருடங்களாக இந்திய மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை பெற்ற எல்ஐசி தொடர்ந்து இன்சூரன்ஸ் சந்தையில் பெரும் ஆதிக்கத்தை கொண்டுள்ளது.

மேலும் எல்ஐசி தற்போது டிஜிட்டல் சேவைகளை பெரியளவில் மேம்படுத்தி வரும் வேளையில், இளம் தலைமுறையினரின் கவனத்தை ஈர்த்து தொடர்ந்து இத்துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் 100 வருடத்தை எட்டும் பாதையில் நகர்ந்துக்கொண்டு இருக்கிறது எல்ஐசி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+