இன்றெல்லாம் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அரசாங்கத் திட்டங்களில் பலரும் முதலீடு செய்கின்றனர். அப்படி நம்பகமான அதே வேளையில் பாதுகாப்பான முதலீட்டை விரும்பும் நபர்களுக்கு தான் போஸ்ட் ஆபீஸ்களில் பிக்சட் டெபாசிட் வழங்கப்படுகிறது. இதனை போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்றும் கூறுவர். இந்தத் திட்டத்தில் மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்யும் போது அதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வருமானம் கிடைக்கும்.
போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தின் சிறப்பம்சமே உங்களுடைய முதலீடு முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்கும். ஏனெனில் முழுக்க முழுக்க மத்திய அரசால் வழங்கப்படும் திட்டமாக இருப்பதால் நீங்கள் கஷ்டப்பட்டு போடும் முதலீட்டுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாது.

குறைந்தபட்சம் முதலீடு: போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட்களைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். இதற்கு அதிகபட்சம் வரம்பு என்பது எல்லை. உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகையை முதலீடு செய்யலாம். அனைத்து முதலீட்டாளர்களுக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய விருப்பமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் குறைந்தபட்ச தொகை 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறிய முதலீட்டாளராக இருந்தாலும் சரி.. அதிக அளவில் முதலீடு செய்ய விரும்புபவரானாலும் சரி இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.FD திட்டம் வெவ்வேறு காலங்களில் கிடைக்கிறது. அவற்றில் உங்களுக்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்யலாம். ஏனெனில் சிலருக்கு முதலீடு செய்து அடுத்து வரும் 2 ஆண்டுகளில் ஏதேனும் முக்கிய செலவுகள் இருக்கும். எனவே உங்கள் எதிர்கால இலக்கை வைத்து, உங்களுக்கு விருப்பமான கால அளவை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.
வட்டி விகிதங்கள்: 1 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.9%, 2 வருட பிக்செட் டெபாசிட் திட்டத்திற்கு 7 சதவீதம், 3 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.1%, 5 வருடத்திற்கு டெபாசிட் திட்டத்திற்கு 7.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த பதிவில் ஒருவர் 60,000 ரூபாயை FD திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பது குறித்து பார்ப்போம்.
ஒரு நபர் 60,000 ரூபாயை அதிகபட்ச ஆண்டான 5 ஆண்டு FD திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 5 வருடங்கள் கழித்து 36,997 ரூபாய் வட்டியை பெற்றிருப்பார். இதனால் அசலும் வட்டியும் சேர்த்து 86,997 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
பிக்சட் டெபாசிட் திட்டத்தை பொறுத்தவரையில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு கூட்டு வட்டி வழங்கப்படும். கூட்டு வட்டி என்றால் முதலில் உங்களுடைய முதலீட்டுக்கு வட்டி கிடைக்கும். அதன் பிறகு மறு ஆண்டிலிருந்து அந்த முதலீடு மற்றும் வட்டி ஆகிய இரண்டையும் சேர்த்து வட்டி கிடைக்கும்.
FD திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரியின் பிரிவு 80 சி-யின் கீழ் வரி விலக்கு பெறலாம். வரி செலுத்துவோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிக்சட் டெபாசிட்டை மக்கள் தேர்வு செய்வதற்கான முக்கிய காரணம் அரசின் உத்தரவாதம் உங்கள் முதலீட்டுக்கு இருக்கும். மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படுவதால் பாதுகாப்பாக அதேசமயம் சரியான நேரத்தில் வருமானம் பெற முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போலல்லாமல், சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்படாமல் வட்டி வழங்கப்படுவதால் கண்டிப்பாக அதற்கு வருமானம் நிச்சயம் என்பதை தெரிந்து கொண்டே முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications