இந்தியவில் மிகவும் பேலென்ஸாக முதலீடு செய்யும் மக்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. நாட்டில் அதிகப்படியாக செலவு செய்யும் மக்களை கொண்ட மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் வெறும் 90 லட்சம் மக்கள் மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், தங்கம், வங்கி வைப்பு நிதி, ரியல் எஸ்டேட், சிறு சேமிப்பு என பல தரப்பட்ட பிரிவில் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மத்திய அரசு சிறு சேமிப்பு திட்டம் குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளோரும், செய்யப்போகிறவர்களும் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயமாக வரும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இந்தியா முழுக்க நடைமுறைப்படுத்தப்பட்டாலும். தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த அறிவிப்பு மூலம் என தாக்கம் ஏற்படும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின் பொருள் என்ன..?
தமிழ்நாட்டில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் செய்யும் சிறு சேமிப்பு திட்டங்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவை. பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC), அஞ்சலக கால திட்ட வைப்பு (POTD), மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் மற்றும் அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் (POMIS) போன்ற பல்வேறு திட்டங்களில் அடுத்த 3 மாதத்திற்கு எவ்விதமான மாற்றமின்றி தற்போது இருக்கும் வட்டி விகிதம் தொடரும்.
இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் மக்களுக்கு, அரசாங்கத்தால் அவ்வப்போது வட்டி விகிதங்கள் திருத்தம் செய்து நிர்ணயிக்கப்படுகின்றன. பொதுவாக, இந்த வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் நிதி அமைச்சகம் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்யப்பட்டு, தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்படுகின்றன.
ஆனால், 2024-25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுக்காக (ஜூலை முதல் செப்டம்பர் வரை) சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இருந்த அதே வட்டி விகிதங்களே, வரும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிற்கும் பொருந்தும்.
எடுத்துக்காட்டுக்கு: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தின் கீழ் தற்போது 7.1% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வட்டி விகிதம், வரும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும் நீடிக்கும்.
ஜூலை-செப்டம்பர் 2024 காலாண்டிற்கான முக்கிய அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களின் முழு விபரம்:
சேமிப்பு கணக்கு - 4 சதவீத வட்டி விகிதம்
1 ஆண்டு கால திட்ட வைப்பு - 6.9 சதவீத வட்டி விகிதம்
2 ஆண்டு கால திட்ட வைப்பு - 7 சதவீத வட்டி விகிதம்
3 ஆண்டு கால திட்ட வைப்பு - 7.1 சதவீத வட்டி விகிதம்
5 ஆண்டு கால திட்ட வைப்பு - 7.5 சதவீத வட்டி விகிதம்
5 ஆண்டு தொடர் வைப்பு - 6.7 சதவீத வட்டி விகிதம்
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - 8.2 சதவீத வட்டி விகிதம்
மாத வருமான கணக்கு திட்டம் - 7.4 சதவீத வட்டி விகிதம்
தேசிய சேமிப்பு பத்திரம் - 7.7 சதவீத வட்டி விகிதம்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் - 7.1 சதவீத வட்டி விகிதம்
கிசான் விகாஸ் பத்ரா - 7.5 சதவீத வட்டி விகிதம்
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications