ரூ.1 லட்சம் முதலீடு.. போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் தரும் ரிட்டன்ஸ் எவ்வளவு தெரியுமா? ஆஹா!

இந்திய போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் பல வகையான உத்தரவாத வருமான சேமிப்பு திட்டங்களில் ஒன்று, FD-கள்(Fixed Deposit). வங்கிகளிலும் பிக்சட் டெபாசிட்கள் பல்வேறு முதிர்வு காலத்துடன் கிடைக்கிறது. ஆனால் போஸ்ட் ஆபீஸ் FD முதலீடுகளுக்கு வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிடப்பட்டு, ஆண்டு இறுதியில் மட்டுமே வழங்கப்படுகிறது. வெவ்வேறு முதிர்வு காலங்களுடன் வருகின்ற இந்த FD திட்டங்களில் ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

போஸ்ட் ஆபீஸ் இணையதள தகவலின்படி, தற்போது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் 4 விதமான முதிர்ச்சி கால அளவுகளில் கிடைக்கிறது. இவை 1 முதல் 5 வருடங்கள் வரை இருக்கும். இந்த திட்டங்களில் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு 6.9 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை, ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிடப்பட்டு ஆண்டு இறுதியில் வழங்கப்படுகிறது.

 ரூ.1 லட்சம் முதலீடு.. போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் தரும் ரிட்டன்ஸ் எவ்வளவு தெரியுமா? ஆஹா!

போஸ்ட் ஆபீஸ் FD முதலீடுகளுக்கான வட்டி விகிதங்கள்: 1 வருட முதிர்வு காலம் கொண்ட FD திட்டங்களுக்கு 6.9 சதவீதமும், 2 வருடங்களுக்கு 7.0 சதவீதமும், 3 வருடங்களுக்கு 7.1 சதவீதமும், 5 வருடங்களுக்கு 7.5 சதவீதமும் தற்போது வட்டி வழங்கப்படுகிறது.

மேலும் இந்த போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்ச தொகையாக ரூ. 1,000 முதலீட்டில் தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு என்பது எதுவும் இல்லை. எவ்வளவு தொகை வேண்டுமானாலும், முதலீடு செய்யலாம். உதாரணமாக ரூ. 1100 மற்றும் ரூ. 6,600 போன்ற தொகையை இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். ஆனால் ரூ. 1110, ரூ.9,980 போன்ற தொகையை முதலீடு செய்ய முடியாது.

போஸ்ட் ஆஃபீஸ் FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு லாபம்?: ரூ. 1 லட்சம் தொகையை போஸ்ட் ஆபீஸ் FD முதலீட்டில் 1 வருடத்திற்கு முதலீடு செய்வதன் மூலம் 6.19 சதவீத வட்டி விகிதத்தில் 1 வருடத்திற்கு வட்டியாக 7,081 ரூபாய் கிடைக்கும். அப்படியானால் முதிர்வு காலத்தின் போது ரூ.1,07,081 வழங்கப்படும்.

அதே போல ரூ. 1 லட்சம் தொகையை போஸ்ட் ஆபீஸ் FD முதலீட்டில் 2 வருடத்திற்கு முதலீடு செய்வதன் மூலம் 7 சதவீத வட்டி விகிதத்தில் 2 வருடத்திற்கு வட்டியாக 14,888 ரூபாய் கிடைக்கும். அப்படியானால் முதிர்வு காலத்தின் போது ரூ.1,14,888 பெறுவீர்கள்.

ரூ. 1 லட்சம் தொகையை போஸ்ட் ஆபீஸ் FD முதலீட்டில் 3 வருடத்திற்கு முதலீடு செய்வதன் மூலம் 7.1 சதவீத வட்டி விகிதத்தில் 3 வருடத்திற்கு வட்டியாக 23,507.5 ரூபாய் கிடைக்கும். அப்படியானால் முதிர்வு காலத்தின் போது ரூ.1,23,507.5 கிடைக்கும்.

ரூ. 1 லட்சம் தொகையை போஸ்ட் ஆபீஸ் FD முதலீட்டில் 5 வருடத்திற்கு முதலீடு செய்வதன் மூலம் 7.5 சதவீத வட்டி விகிதத்தில் 5 வருடத்திற்கு வட்டியாக 44,995 ரூபாய் கிடைக்கும். அப்படியானால் முதிர்வு காலத்தின் போது ரூ.1,44,995 பெறுவீர்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+