ஒவ்வொரு பகுதியிலும் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது. மக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இங்கு சென்று புகார் அளிக்கலாம். அப்படி புகார் அளித்த ஒரு நபருக்கு தற்போது நீதி கிடைத்துள்ளது. மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் மனஷா என்ற நபர் தனக்கு போஸ்ட் ஆபீஸில் 50 பைசா திருப்பித் தரவில்லை என்று கூறி புகார் அளித்துள்ளார். அதற்கு குறை தீர்ப்பு ஆணையம் ரூ.15,000-த்தை அந்த நபருக்கு இழப்பீடு வழங்கக்கோரி போஸ்ட் ஆபீஸ்க்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மானசா என்பவர் பொலிச்சலூர் தபால் நிலையத்தில் பதிவு கடிதத்தை அனுப்பியுள்ளார். அப்போது இந்த சேவைக்கு ரூ.29.50 பைசா செலவாகும் என போஸ்ட் ஆபீஸ் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. ஆனால் மானசா அதற்கு பதிலாக மொத்தம் 30 ரூபாயை செலுத்தியுள்ளார். மீதி 50 பைசா திரும்ப கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு மீதி திரும்ப கிடைக்கவில்லை.

டிஜிட்டல் பேமென்ட் முறையான "பே யு" QR குறியீட்டில் தொழில்நுட்பக் கோளாறு இருந்ததால் சிஸ்டம் தானாகவே 30 ரூபாயாக ரவுண்டு ஆப் செய்து கொண்டது என்று தபால் அலுவலக தரப்பில் அந்த நபரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனஷா தனது புகாரில், அஞ்சலகத்தின் பரிவர்த்தனை நடைமுறை பெரும் நிதி முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று கவலை தெரிவித்தார். இந்த முறை, பெரும் தொகையை தவறாகப் பெறவும், கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் மற்றும் அரசாங்கத்திற்கு GST வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
பொதுவாக 50 பைசாவுக்கு குறைவான எந்த தொகையும் போஸ்ட் ஆபீஸ் இன் சாஃப்ட்வேர் டிசைன் காரணமாக வழங்கப்படாது என தபால் அலுவலகத்தின் சார்பில் கூறப்பட்டது. இதை நியாயமற்ற வர்த்தக நடைமுறை என நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் கூறி தீர்ப்பளித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஆணையம் சாப்ட்வேர் கோளாறு காரணமாக தபால் அலுவலகம் அதிக கட்டணம் வசூலித்ததை கண்டறிந்தது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 ஆம் ஆண்டின் பிரிவு 2(47)-இன் கீழ் இது நியாயமற்று நடைமுறை என தீர்ப்பளித்து, இந்த தொகைக்கு 15,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
50 பைசாவாக இருந்தாலும் மக்களின் பணம் அதிகமாக வசூலிக்கப்பட்டால் இத்தகைய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். இந்த வழக்கில் புகார் செய்த மானசாவின் மீதி தொகையான 50 பைசாவுக்கு பதிலாக தற்போது சுமார் 2999900 சதவீதம் தொகை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications