ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தபால் நிலையங்கள் அனைத்திலும் பொது மக்களுக்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி அன்று ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவின் போது சகோதரிகள் இணைந்து சகோதரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக ராக்கிகளை கட்டுவார்கள். ஆனால் வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்த பண்டிகையை கொண்டாட முடியாமல் தவிக்கும் சகோதரர் மற்றும் சகோதரிகளுக்காக போஸ்ட் ஆபீஸ் முக்கிய ஏற்பாடுகளை செய்துள்ளது.
ராக்கிகளை அனுப்புவதை எளிதாக்குவதற்காக தபால் நிலையங்களில் தற்போது கவர்கள் மற்றும் பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. இவை இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு பாதுகாப்பாக ராக்கிகளை அனுப்ப உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்களுக்கு இங்கிருந்தே அன்பை பரிமாறும் விதமாக ராக்கிகளை பத்திரமாக அனுப்ப முடியும். இதற்காக தபால் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்பீடு போஸ்ட் போன்ற விரைவு தபால் சேவைகள் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் ராக்கிகளை அனுப்பலாம். நியாயமான விலையில் இந்த சேவைகளை வழங்க தபால் துறை முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது. மேலும் இவற்றை அனுப்புவதற்கான கவர்கள் மற்றும் பாக்ஸ்கள் போஸ்ட் ஆபீஸ்களிலேயே கிடைக்கின்றன. இதில் 11 x 22 சென்டிமீட்டர் உள்ள கவர்கள் 15 ரூபாய்க்கும் 15 x 26 சென்டிமீட்டர் உள்ள கவர்கள் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
மேலும் நீண்ட தூரத்திற்கு கொண்டு சேர்ப்பதால், அஞ்சல் துறை சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி அவை கொண்டு செல்லும்போது சேதம் அடையாமல் இருப்பதற்காக சரியாக பேக் செய்ய வேண்டும். லேபிளை பயன்படுத்தி விவரங்களை துல்லியமாக எழுதவோ அல்லது டைப் செய்யவோ வேண்டும். நீங்கள் எழுதும் லேபிளில் மொபைல் நம்பர் கட்டாயமாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
மேலும் ராக்கிகளை பேக் செய்யும்போது கீழே சிந்தும் பொருட்கள், அழுகி சேதமடையும் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் போன்றவற்றை அனுப்பக் கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில் சுங்க அதிகாரிகளின் பரிசோதனையின் போது பறிமுதல் செய்யப்படலாம்.
ராக்கிகளை அனுப்பும் போது, முழு முகவரி மற்றும் அனுப்புபவர், பெறுபவர் ஆகியோரின் தொலைபேசி எண்களைக் குறிப்பிடுவது அவசியம். இதன் மூலம் தபால் தபால்கள் தாமதமின்றி சேர்வதை உறுதி செய்ய முடியும்.
வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்களுக்கு இந்த ரக்ஷா பந்தன் பண்டிகைக்காக தபால் மூலம் ராக்கிகளை அனுப்ப தபால் துறை செய்த இந்த நடவடிக்கை பலருக்கும் உதவிகரமானதாக உள்ளது. மேலும் இவற்றை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதற்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் தாமதங்களை தவிர்த்து சரியான நேரத்தில் ராக்கிகள் சென்றடைய இந்த தேதிக்குள் அனுப்புவது சிறந்ததாக இருக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications