பல பாரம்பரிய முதலீட்டாளர்களுக்கு போஸ்ட் ஆபீஸ்கள் நம்பகமான முதலீட்டு தேர்வு. மியூச்சுவல் ஃபண்டுகளில் தெரியாமல் முதலீடு செய்வதை விட நம்பகமான திட்டங்களில் முதலீடு செய்து லாபம் பெறலாம் என்பதனால் தான் பலரும் போஸ்ட் ஆபீஸ்களை நாடுகின்றனர். இங்கு எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு ஏற்ற பிரத்தியேக திட்டங்கள், நீண்ட நாட்கள் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
அவற்றில் தனிநபர் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து முதலீடு செய்யலாம். அப்படி நீண்ட காலமாக மக்களுக்கு விருப்ப தேர்வாக இருக்கும் ஒரு திட்டம் தான் தொடர் வைப்பு திட்டம். இதனை ரெக்கரிங் டெபாசிட் அல்லது RD என்றும் கூறுவர்.

தற்போது போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என எந்த வயதினர் வேண்டுமானாலும் RD கணக்கைத் தொடங்கலாம். RD திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். தேவைப்பட்டால் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு: போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச தொகை இதற்கு இல்லை. எனவே உங்களால் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு முதலீடு செய்யலாம். மைனர் குழந்தைகளுக்கு மைனர் போஸ்ட் ஆபீஸ் RD கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்கை அவர்களுடைய பெற்றோர்கள் நிர்வகிக்கலாம்.
போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் ரூ.8 லட்சம் பெறுவது எப்படி?: ஒவ்வொரு மாதமும் போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் ரூ.5000-த்தை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 5 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்ச ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள்.
இதற்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்பட்டால் மொத்தமாக 56,830 ரூபாய் வட்டி கிடைக்கும். இதனால் முதிர்வு தொகை 3,56,830 ரூபாயாக இருக்கும். அதுவே நீங்கள் மீண்டும் 10 ஆண்டுகளுக்கு உங்களுடைய கணக்கை நீட்டிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 10 வருடம் முடிவில் ரூ.6 லட்ச ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக ரூ.2,54,272 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் 10 வருடம் கழித்து உங்களுடைய மொத்த முதிர்வு தொகை ரூ.8,54,272 கிடைக்கும்.
ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டிக்கு டிடிஎஸ் கழிக்கப்படும். RD திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 10% டிடிஎஸ் பொருத்தம். பிக்சட் டெபாசிட்களை போல் அல்லாமல் இந்த திட்டத்தில் மாதம் மாதம் முதலீடு செய்ய வேண்டும். உங்களால் எவ்வளவு தொகை முடிகிறதோ அவ்வளவு தொகையை முதலீடு செய்யலாம். ஆனால் 8 லட்ச ரூபாய் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு மாதம் 5000 என்ற வீதத்தில் பத்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்.
மொத்தமாக முதலீடு செய்ய முடியாமல், சிறு தொகையை சேமிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications