போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கு என்றால் என்ன? இதற்கு எவ்வளவு வட்டி தெரியுமா?

வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் செலவுகளின் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக மக்கள் தங்கள் எதிர்காலத்திற்காக சிறிதளவு பணத்தையாவது பாதுகாப்பாக சேமிக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளனர். நாட்டில் ஏராளமான வங்கிகள் நல்ல வட்டி விகிதங்கள் மற்றும் சேமிப்பு கணக்கிற்கான பல சலுகைகளை வழங்கினாலும்.. கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள மக்களுக்கு வங்கிகள் உடனடியாக கிடைப்பதில்லை. இது போன்ற இடங்களில் வங்கிகள் இல்லாத காரணத்தினால் போஸ்ட் ஆபீஸ்களைத் தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்தப் பதிவில் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கு என்றால் என்ன? அவற்றின் பயன்கள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்திய அரசு 1873-ஆம் ஆண்டில் அரசாங்க சேமிப்பு வங்கிச் சட்டம் எனப்படும் ஒரு சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. அதன் கீழ் போஸ்ட் ஆபீஸ்களில் சேமிப்பு கணக்கு அதாவது சேவிங்ஸ் அக்கவுண்ட் நடைமுறைக்கு வந்தது. பணத்தை சேமிக்க விரும்பும் ஒவ்வொரு தனி நபரும் போஸ்ட் ஆபீஸ்களில் சேமிப்பு கணக்கைத் திறந்து கொள்ளலாம்.

 போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கு என்றால் என்ன? இதற்கு எவ்வளவு வட்டி தெரியுமா?


போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கு (Savings Account) என்றால் என்ன?: போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கு என்பது நாடு முழுவதும் உள்ள இந்திய அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் வைப்புத் திட்டமாகும். குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் வசிப்பவர்களுக்கு இது ஒரு பயனுள்ள திட்டமாகும். பிற வங்கிகளில் எப்படி வங்கி கணக்குகள் செயல்படுகிறதோ அதேபோல போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கையும் பயன்படுத்தலாம்.

போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கிற்கான தகுதி?: தபால் அலுவலகத்தில் கணக்கைத் திறக்க, ஒருவர் கண்டிப்பாக 18 வயதை பூர்த்தி பெற்றிருக்க வேண்டும். மைனராக இருந்தால் 10 வயதை கடந்திருக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று பேர் கூட்டாக கூட்டு சேமிப்புக் கணக்கையும் தொடங்கலாம்.

போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கிற்கான வட்டி விகிதம் எவ்வளவு?: தற்போது போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கிற்கு 4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வட்டி கணக்கிடப்படுகிறது. வருமான வரி விதிகளின்படி, ஒரு தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் ரூ.10,000-க்கும் குறைவாக வருமானம் ஈட்டினால் வரி இல்லை.

போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கை எப்படி திறப்பது?:

ஸ்டெப் 1: உங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் செல்லவும் அல்லது விண்ணப்பப் படிவத்தை இந்திய அஞ்சல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கவும்.

ஸ்டெப் 2: தேவையான விவரங்களுடன் படிவத்தை நிரப்பவும். அதாவது ஆதார் கார்டு, பான் கார்டு, 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவை தேவைப்படலாம்.

மேற்கூறிய ஆவணங்களைச் சமர்ப்பித்தவுடன், ஒருவர் தங்கள் சேமிப்புக் கணக்கை எளிதாகத் திறக்கலாம்.

எவ்வளவு டெபாசிட் செய்ய வேண்டும்?: குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக டெபாசிட் செய்வதற்கு எந்தவித வரம்புகளும் இல்லை. நீங்கள் பணத்தை திரும்பப் பெற்றாலும் 500 ரூபாயைத் தொடர்ந்து அக்கவுண்டில் பராமரிக்க வேண்டும்.

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கை திறப்பதற்கான பலன்கள்: தபால் அலுவலக சேமிப்பு கணக்கை திறப்பதனால் பல நன்மைகள் உள்ளன. இதற்கு முதிர்வு தேதி என்று எதுவும் இல்லை. எனவே, உங்களுக்கு தேவைப்படும்போது பணத்தை டெபாசிட் செய்யவோ பணத்தை எடுக்கவோ செய்யலாம்.

எனவே கிராமப்புறங்களில் இருப்பவர்களும் எளிதாக கணக்கைத் திறக்கலாம். அதே போல சேமிப்பு கணக்குகளை ஒரு தபால் நிலையத்திலிருந்து இந்தியாவில் உள்ள வேறு ஒரு தபால் நிலையத்திற்கு ஈசியாக மாற்ற முடியும். ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால் அந்த சேமிப்பு கணக்கில் உள்ள தொகை யாருக்கு செல்ல வேண்டும்? என்பதை கணக்கு வைத்திருப்பவர் முன்கூட்டியே தீர்மானித்து பரிந்துரைக்கலாம். ஒரு தனிப்பட்ட கணக்கை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூட்டுக்கணக்காக மாற்றலாம். கூட்டு கணக்கை தனிநபர் கணக்காக மாற்ற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+