இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் சேமிப்பு கணக்கு உள்ளது. பணப்பரிவர்த்தனை செய்வதற்கு கண்டிப்பாக தனிநபருக்கு ஒரு சேமிப்பு கணக்கு முக்கியம். அதேபோல அரசாங்கத் திட்டத்தின் பலன்களை பெற விரும்பினாலும், யுபிஐ மூலம் பணம் செலுத்த விரும்பினாலும் அல்லது ஆன்லைன் முதலீடுகளை செய்ய விரும்பினாலும் சேமிப்பு கணக்கு இல்லாமல் செய்ய முடியாது. பொதுவாக மக்கள் வங்கியில் தான் சேமிப்பு கணக்கை தொடங்குகின்றனர்.
ஆனால் தபால் நிலையங்களை கணக்கு தொடங்கும் போது பல நன்மைகள் கிடைக்கிறது. வங்கி சேமிப்பு கணக்குகளைப் போலவே அனைத்து வசதிகளும் இதற்கும் கிடைக்கும். அதேபோல பிற வங்கிகளை விட போஸ்ட் ஆபீஸ்களில் தொடங்கப்படும் கணக்குகளுக்கு வட்டி அதிகம்.

வெறும் 500 ரூபாயில் கணக்கு தொடங்கலாம்: நீங்கள் வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் போது குறைந்தபட்ச இருப்பை செலுத்துவது முக்கியம். இல்லையெனில் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். வழக்கமாக வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச வரம்பாக 1,000 ரூபாய் இருக்க வேண்டும். ஆனால் தபால் அலுவலக சேமிப்பு கணக்கை திறப்பதற்கு 500 ரூபாய் போதும்.
வங்கியைப் போலவே வழங்கப்படும் வசதிகள்: வங்கியைப் போலவே தபால் அலுவலக சேமிப்பு கணக்கிற்க்கும் பல்வேறு வசதிகள் கிடைக்கிறது. கணக்கைத் திறக்கும்போது செக் புக், ஏடிஎம் கார்டு, இ-பாங்கிங் போன்ற வசதிகள் கிடைக்கிறது.
இது தவிர, அடல் பென்ஷன் யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஆகியவற்றின் பலன்களையும் பெறலாம். வருமானவரிச் சட்டம் 80TTA-வின் கீழ் சேமிப்பு கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் சம்பாதித்த 10,000 ரூபாய் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
வங்கிகளை விட சிறந்த வட்டி: சேமிப்பு கணக்குகளில் இருக்கும் தொகைக்கு ஏற்ப வங்கிகள் அவ்வப்போது வட்டி வழங்கும். ஆனால் இந்த வட்டி 2.70 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை மட்டுமே இருக்கும். ஆனால் வங்கிகளோடு ஒப்பிடுகையில் தபால் அலுவலகங்களில் சற்று அதிக அளவிலான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
தபால் அலுவலக சேமிப்பு கணக்கிற்கான வட்டி: 4.0 சதவீதம்
எஸ்பிஐ பேங்க் சேமிப்பு கணக்கிற்கான வட்டி: 2.70 சதவீதம்
PNB சேமிப்புக் கணக்கிற்கான வட்டி: 2.70 சதவீதம்
BOI சேமிப்புக் கணக்கிற்கான வட்டி: 2.90 சதவீதம்
HDFC சேமிப்புக் கணக்கிற்கான வட்டி: 3.00 சதவீதம் முதல் 3.50 சதவீதம் வரை
ஐசிஐசிஐ சேமிப்புக் கணக்கிற்கான வட்டி: 3.00 சதவீதம் முதல் 3.50 சதவீதம் வரை
யார் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம்?: தனிநபர்கள் கணக்கு திறக்கலாம். அதேநேரம் இரண்டு பேராக சேர்ந்து கூட்டாகவும் கூட்டுக்கணக்கை திறக்க முடியும். மைனருக்காக கணக்கு தொடங்கப்பட வேண்டுமானால் அவர்களின் சார்பாக சட்டபூர்வ பாதுகாவலர்கள் அல்லது பெற்றோர்கள் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் தங்களுடைய சொந்த பெயரிலேயே கணக்கை நிர்வகிக்க முடியும். அதேபோல ஒரு மைனர் 18 வயதை பூர்த்தி பெற்ற பிறகு கேஒய்சி ஆவணங்களை சமர்ப்பித்து தபால் அலுவலகத்தில் தங்களுடைய கணக்கை புதுப்பிக்க வேண்டும்.
தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒரு நிதியாண்டில் 500 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் பராமரிப்பு கட்டணமாக ரூ. 50 வசூலிக்கப்படும். மேலும் நீங்கள் பாஸ்புக்கை தொலைத்துவிட்டால் டூப்ளிகேட் பாஸ்புக் வழங்க 50 ரூபாய் செலுத்த வேண்டும். நீங்கள் கணக்கு திறக்கும் போது பரிந்துரைத்த நாமினியின் பெயரை மாற்றுவதற்கு அல்லது ரத்து செய்யவும் 50 ரூபாய் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். ஒரு வருடத்தில் 10 செக் லீஃப்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம், அதற்கு எந்தவித கட்டணமும் இல்லை. அதன் பிறகு ஒவ்வொரு செக் லீஃபுக்கும் 2 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications