இதற்கு முன்னர் பல பதிவுகளில் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தின் நன்மைகள் குறித்து பார்த்தோம். இந்த பதிவிலும் ஒரு போஸ்ட் ஆபீஸ் திட்டத்தை பற்றி தான் பார்க்கவுள்ளோம். தபால் அலுவலகங்களில் வழங்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து கூட்டு வட்டியின் மூலம் வட்டி வருமானத்தை பெறலாம். பெரிய இலக்குகளை அடைய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி ஏற்றத் திட்டம்.
இது நீண்ட கால சேமிப்புத் திட்டம் என்பதால் உங்கள் குறுகிய கால இலக்குகளுக்காக இந்த சேமிப்பைப் பயன்படுத்த முடியாது. குழந்தை பிறந்தவுடன் உங்கள் குழந்தையின் கல்விச் செலவுகள் அல்லது வீடு கட்டுதல் போன்ற பெரிய இலக்குகளுக்காக இந்த திட்டத்தில் சேமிக்கலாம். PPF திட்டத்தில் ஒரு நாளைக்கு 80 ரூபாய் சேமித்தால் 15 ஆண்டுகள் கழித்து எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது குறித்து தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்

லாக்-இன் காலம்: பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் லாக்கின் காலம் 15 ஆண்டுகள். 15 ஆண்டுகளுக்கும் தொடர்ந்து PPF திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இடையில் பணத்தை எடுக்க முடியாது. அப்படி எடுத்தாலும் அதற்கு அபராதம் விதிக்கப்படும்.
வட்டி விகிதம்: PPF திட்டத்திற்கு தற்போது 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச முதலீடாக ஒரு நிதியாண்டுக்கு 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இதே போல ஒவ்வொரு நிதியாண்டும் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்.
வரிச் சலுகைகள்: PPF திட்டத்திற்கு வருமானவரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு வழங்கப்படுகிறது. பல முதலீட்டாளர்களும் PPF திட்டத்தை தேர்வு செய்வதற்கு வரிசலுகைகள் ஒரு மிக முக்கிய காரணம். முதிர்வு தொகை, வட்டி உட்பட எதற்கும் வரி இல்லை.
PPF திட்டத்தில் தினமும் 80 ரூபாய் சேமித்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?: PPF திட்டத்தில் தினமும் 80 ரூபாய் சேமித்தால் மாதத்திற்கு ரூ.2,400. அப்படியானால் 1 வருடத்திற்கு 28,800 ரூபாய். ஒவ்வொரு நிதியாண்டும் 28,800 ரூபாயை போஸ்ட் ஆபீஸ் PPF திட்டத்தில் வரவு வைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் இதே தொகையை செலுத்தி வந்தால் மொத்தமாக ரூ.4,32,000 முதலீடு செய்திருப்பீர்கள். 7.1% வட்டி விகிதத்தில் வருமானமாக 3,49,096 ரூபாய் கிடைக்கும். மேலும் முதிர்வு தொகையாக 7,81,096 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
சேமிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் குறைந்தபட்ச தொகையிலும் தொடங்கலாம். பிற்காலத்தில் சிறிய தொகையும் அதிகமாக வளரும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். நீங்கள் 80 ரூபாயைத்தான் தினமும் சேமிக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. 50 ரூபாய் கூட சேமிக்கலாம்.


Click it and Unblock the Notifications