சென்னை: தபால் நிலையங்களில் வழங்கப்படும் பல்வேறு சேமிப்பு திட்டங்களும் வங்கிகளை விட அதிக வட்டி வருமானத்தை வழங்கக்கூடியவையாக இருக்கின்றன. அந்த வகையில் 7%க்கும் மேல் வட்டி வழங்கக்கூடிய ஒரு திட்டம் தான் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் (POST OFFICE MONTHLY INCOME SCHEME).
முதலுக்கு மோசம் இல்லாத கணிசமான வட்டி வருவாயை தரக்கூடிய ஒரு திட்டம் இது. அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் ஒரு முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் பணத்தை செலுத்தலாம் அதேபோல ஒவ்வொரு மாதமும் வட்டியானது உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் உங்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி பிடித்தம் செய்யப்படாது. மத்திய அரசின் நிதி துறையின் கீழ் செயல்படக்கூடிய ஒரு திட்டம் இது என்பதால் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக இதனை கருதி மக்கள் நம்பிக்கையோடு இது முதலீடு செய்யலாம்.
சந்தையுடன் இணைக்கப்படாத திட்டம் என்பதால் உங்களது முதலீடும் குறையாது கூடுதலாக வட்டியும் கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சம் ரூ.1,000இல் இருந்து முதலீட்டை தொடங்க முடியும். ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் ரூபாய் வரை ஒருவர் முதலீடு செய்யலாம். இதுவே கூட்டுக் கணக்காக இருந்தால் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் அதிகபட்ச லாக் இன் காலம் என்பது ஐந்து ஆண்டுகள்.
இந்த திட்டத்தின் விதிகளின்படி கணக்கு தொடங்கி ஓராண்டு முடியும் வரை பணத்தை திரும்ப பெற முடியாது. ஒருவேளை லாக்கின் காலத்திற்கு முன்பு பணத்தை திரும்ப பெற விரும்பினால் குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும்.
கணக்கு தொடங்கிய மூன்று ஆண்டுகளில் பணத்தை எடுக்க விரும்பினால் பிரின்சிபல் தொகையிலிருந்து 2% கழிக்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்குள் பணத்தை திரும்ப பெற்றால் பிரின்சிபில் தொகையிலிருந்து 1% திரும்ப பெற்றுக் கொள்ளப்படும்.
இந்த முதலீட்டை வருமான வரி பிரிவின் 80சி-இன் கீழ் காட்டி வரிச்சலுகை எதையும் பெற முடியாது. இந்தியாவின் எந்த ஒரு அஞ்சல் நிலையங்களிலும் இந்த கணக்கை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். இந்திய குடிமகன்கள் அனைவருமே இதில் கணக்கை தொடங்கலாம் அதேபோல 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது கார்டியன் கணக்கை தொடங்க முடியும். அந்த குழந்தை 18 வயது நிறைவடைந்த பின்னர் அதில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
கணக்கு தொடங்குவது எப்படி?: இந்த திட்டத்தில் கணக்கினை தொடங்குவதற்கு அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வீட்டின் அருகே உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று ஒரு சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் அல்லது இந்தியா போஸ்ட் இணையதளத்தில் சென்று இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களை சரி பார்ப்பதற்காக உண்மையான சான்றிதழ்களையும் கையில் கொண்டு செல்லுங்கள்.
உங்களது பெயர் பிறந்த தேதி மொபைல் எண் மற்றும் நாமினி ஆகிய விவரங்கள் சரிபார்க்கப்படும் முதன்முறையாக குறைந்தபட்சம் ரூ.1,000 பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதனை ரொக்கமாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கலாம். உங்களுக்கான வட்டியானது மாதாந்திர அடிப்படையில் உங்களது கணக்கிலேயே வரவு வைக்கப்படும்.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications