போஸ்ட் போட்டு பேசிக்கொள்ளும் நடைமுறை குறைந்து விட்டாலும்.. இன்னமும் சிறந்த சேமிப்பு திட்டங்களை போஸ்ட் ஆபீஸ்கள் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. தீபாவளி பொங்கல் பண்டிகை போன்ற நாட்களில் உறவினர்களிடமிருந்து வரும் மணி ஆர்டர்களைக் கண்டால் நமக்கு அவ்வளவு சந்தோஷம் வரும். கூகுள் பே செயலியின் காரணமாக தற்போது இவை எல்லாம் நினைவுச் சின்னமாக மாறினாலும்.. போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களை இன்னமும் மக்கள் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.
அரசின் உத்தரவாதத்துடன் செயல்படும் இந்தத் திட்டங்கள் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். மேலும், இவற்றில் கிடைக்கும் வட்டி விகிதங்களும் சில நேரங்களில் வங்கிகளை விட அதிகமாக உள்ளது.

உடனடித் தேவைக்கு சேமிப்பது என்றாலும் சரி, எதிர்காலத்திற்காக சேமிப்பது என்றாலும் சரி, தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கும்.
இந்தியா முழுவதும் 1,54,000 தபால் நிலையங்கள் இந்தத் திட்டங்களை வழங்குகின்றன. குறுகிய காலம் மற்றும் நீண்ட கால இலக்குகளுக்காக, உங்கள் சேமிப்பை சிறப்பாக நிர்வகிக்கவும் வளர்க்கவும் பல்வேறு திட்டங்கள் இங்கு வழங்கப்படுகின்றன.
அஞ்சல் அலுவலக திட்டங்களின் வகைகள்:
சேமிப்புக் கணக்குகள் (Savings Accounts): வழக்கமான வங்கிக் கணக்கு போலவே பணம் செலுத்தி எடுக்கலாம். தற்போதைய வட்டி விகிதம் 4 சதவிகிதம் மற்றும் முழுமையாக வரிக்கு உட்பட்டது.
தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு (RD): ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்து, டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டியைப் பெறுவீர்கள். தற்போது 6.7 சதவீத வருடாந்திர கூட்டு வட்டி வழங்கப்படுகிறது.
நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் (TD): குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை பணத்தை முதலீடு செய்து நிலையான வட்டி பெறலாம். 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் என நான்கு கால அவகாசங்கள் உள்ளன. அதற்கேற்ப வட்டி விகிதங்கள் மாறுபடும்.
தேசிய சேமிப்பு மாதாந்திர வருமான கணக்கு (MIS): நீங்கள் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்து மாதாந்திர வட்டி வருமானத்தைப் பெறுவீர்கள். இதற்கு வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4%.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS): இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF): வரிச் சலுகைகளுடன் கூடிய இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வட்டியைப் பெறுவீர்கள். இது ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி வழங்குகிறது. வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளும் PPF திட்டத்திற்கு கிடைக்கும்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC-கள்): 5 ஆண்டுகள் மொத்த தொகையை முதலீடு செய்து, வட்டியுடன் முதிர்வுத் தொகையைப் பெறலாம். தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி செலுத்துகிறது.
கிசான் விகாஸ் பத்ரா (KVP): ஒரு முறை பணத்தை முதலீடு செய்ய வேண்டும். வட்டி விகிதம் வருடத்திற்கு 7.5 சதவிகிதம். KVP திட்டத்தின் முதிர்வு காலம் 115 மாதங்கள். இந்த காலத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை இரட்டிப்பாகும்.
சுகன்யா சம்ரித்தி கணக்கு (SSA): பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்கு உதவும் வகையில் அதிக வட்டி விகிதத்தை இந்தத் திட்டம் வழங்குகிறது. வருடத்திற்கு 8.2 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.
உங்களுக்கு எந்தத் திட்டம் பொருந்தும்?:
சேமிப்பு கணக்கு: அடிப்படை சேமிப்பு தேவைகளுக்கு யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
RD: வழக்கமான சேமிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்கும் உத்தரவாதமான வருமானத்தைப் பெறுவதற்கும் நல்லது.
TD: ஒரு முறை பணத்தை முதலீடு செய்து நிலையான வருமானம் தேடுபவர்களுக்கு ஏற்றது.
MIS: ஓய்வு பெறுபவர்கள் அல்லது வழக்கமான வருமானம் தேவைப்படுபவர்களுக்கு ஏற்றது.
SCSS: அதிக வட்டி விகிதம் மற்றும் பாதுகாப்பைத் தேடும் மூத்த குடிமக்களுக்கு சிறந்தத் தேர்வாக இருக்கும்.
PPF: நீண்ட கால வரிச் சலுகை முதலீடுகள் மற்றும் செல்வத்தை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற திட்டம்.
SSA: பெண் குழந்தையின் எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்பும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு சிறந்தத் திட்டம்.
NSC மற்றும் KVP: உத்தரவாதமான வருமானத்துடன் கூடிய பாதுகாப்பான முதலீட்டைத் தேடுபவர்களுக்கு ஏற்றது.
திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?: உங்கள் அருகில் உள்ள தபால் நிலைய கிளைக்கு செல்லவும். நீங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை வாங்கவும் அல்லது இந்தியா போஸ்ட் இணையதளத்தில் இருந்து முன்பே பதிவிறக்கவும். படிவத்தை பூர்த்தி செய்து, KYC சான்று உட்பட தேவையான ஆவணங்களை வழங்கவும். அதன் பின் டெபாசிட் தொகையைச் செலுத்தவும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications