பொதுவாக அனைத்து போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தில் அரசு உத்தரவாதம் உள்ளது. மாத வருவாயைப் பொருத்தவரை போஸ்ட் ஆபீஸ் பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.
போஸ்ட் ஆபீஸ் மாத முதலீட்டு திட்டம் : நீங்கள் உங்களது கடின உழைப்பால் பெற்ற பணத்தை சரியான திட்டத்தில் முதலீடு செய்தால் பின்னர் வருவாய் பற்றி கவலைப்படத் தேவையே இல்லை. குறிப்பாக அரசு உத்தரவாதம் தந்த திட்டங்களில் பெரிய தொகையை முதலீடு செய்யும் திட்டங்களுக்கு அரசு பாதுகாப்பு அளித்தால் கவலையே இல்லை.

இதில் போஸ்ட் ஆபீஸ் திட்டமும் ஒன்றாகும். இந்தத் திட்டம் அரசு உத்தரவாதத்துடன் அளிக்கப்படுகிறது. மாத வருவாயைப் பொருத்தமட்டில் போஸ்ட் ஆபீஸ் பல்வேறு திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதனால் பெரும் தொகைக்கு உத்தரவாதமான மாத வருவாயைப் பெறலாம்.
போஸ்ட் ஆபீஸ் மாத முதலீட்டு திட்டம் 2024இல் நீங்கள் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு வட்டி விகிதம் 7.4 சதவீதம் அளிக்கப்படுகிறது. சேமிப்பு காலம் 5 ஆண்டுகள். வட்டி வருவாய் ரூ.3,33,000, மாத வருவாய் ரூ.5550.
இந்தத் திட்டத்தில் தனிநபர் மொத்தமாக ரூ.9 லட்சமும் ஜாயின்ட் அக்கவுன்டில் ரூ.15 லட்சமும் முதலீடு செய்யலாம். நீங்கள் விரும்பினால் 5 ஆண்டுகளுக்குப் பின் முதிர்ச்சித் தொகையைத் திரும்பப் பெறலாம். அதேவேளையில் இந்தத் திட்டத்தை ஐந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கலாம்.
ஒவ்வொரு ஐந்தாண்டிலும் நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் விருப்பத்தைப் பெறலாம் அல்லது நீட்டிக்கலாம். வட்டி வருவாய் மாதாமாதம் உங்களது போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கில் வரவு செய்யப்படும். போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. ஆனாலும் உங்களுக்குத் தரப்படும் வட்டிப்பணம் வரிவிதிக்கப்படலாம்.
போஸ்ட் ஆபீஸ் மாத முதலீட்டு திட்டத்தில் முன்கூட்டி முடிக்கப்படும் கணக்குக்கான விதிகள்: இந்தத் திட்டத்தில் பணத்தை முதிர்ச்சிக்கு முன்கூட்டியே திரும்பப் பெற நினைத்தால் ஓராண்டு கழித்துதான் செய்ய முடியும். அதற்கு முன்பாகச் செய்ய முடியாது. அப்படிச் செய்யும்போது நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
1 முதல் 3 ஆண்டுகளில் பணத்தைத் தரும்பப் பெற்றால் டெபாசிட் தொகையில் 2 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பாக்கிப் பணம் திரும்பத் தரப்படும்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications