நடப்பு நிதியாண்டின் 3-ம் காலாண்டு சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
2020-2021 முதல் நிதியாண்டு பிறகு சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
கடந்த 3 நாணய கொள்கை கூட்டங்களில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. இருந்தாலும் கொரோனாவிற்கு பிறகு சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் ஏமாற்றம் அளித்து வந்தது.
பிக்சட் டெபாசிட்
ரெப்போ வட்டி விகிதம் கடந்த 3 நாணய கொள்கை கூட்டங்களின் போது உயர்த்தப்பட்டதால், பல வங்கிகளின் பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதம் அஞ்சல் அலுவலகத்தின் டெர்ம் டெபாசிட் வட்டி விகிதத்தை விட அதிக லாபம் அளித்து வருகின்றன. எனவே அஞ்சல் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிறு சேமிப்பு முதலீட்டாளர்கள் தங்களுக்கு எப்போது இந்த வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்த்து வந்தனர்.
சிறு சேமிப்பு திட்ட வட்டி விகிதம் உயர்வு
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சாம் வியாழக்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் சில சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.30 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது.
டெர்ம் டெபாசிட்
புதிய வட்டி விகித உயர்வு அறிவிப்பின் படி அஞல் அலுவலக 3 வருடன் டெர்ம் டெபாசி திட்டம் மீதான வட்டி விகிதம் 5.5 சதவீதத்திலிருந்து 0.30 சதவீதம் அதிகரித்து 5.8 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாம் காலாண்டுக்கு மட்டும் பொருந்தும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தை 7.4 சதவீதத்திலிருந்து 0.20 சதவீதம் உயர்த்தி 7.6 சதவீதமாக அறிவித்துள்ளனர்.
பிற திட்டங்கள்
பிபிஎப், செல்வ மகள் உள்ளிட்ட பிற சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டி உயர்வு குறித்த அறிவிப்பு ஏதும் வரவில்லை. ஒருவேலை வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்ட முடிவில் மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் பிற திட்டங்களுக்கான வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications