பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி புதிதாக 500, 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது. ஆனால் திடீரென்று இந்தியாவில் புதிய ரூ.2000 நோட்டுகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து எந்த வங்கியில் வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது அதற்கான பணத்தை மாற்றிக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குப் பின்னர் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து நாடெங்கிலும் உள்ள 19 ரிசர்வ் வங்கி கிளை அலுவலகங்களில் இந்த 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக அந்த ரிசர்வ் வங்கி அலுவலக கிளைகளில் தனி கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட்டன.
இதுவரை புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 98 சதவீத்துக்கு மேல் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாகவும் மக்களிடம் இன்னும் ரூ.9300 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மட்டும் புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி அண்மையில் தெரிவித்தது.
இத்துடன் ரிசர்வ் வங்கி கிளைகள் தவிர்த்து நாடெங்கும் உள்ள போஸ்ட் ஆபிஸ்களில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து தங்களது வங்கிக் கணக்கில் வரவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில போஸ்ட் ஆபிஸ்களில் இந்த நோட்டுகளை மாற்றுவதில் சிரமங்கள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து இப்போது போஸ்ட் ஆபிஸ்களில் எந்தவித சிரமும் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளுக்கும் போஸ்ட் ஆபிஸ் மூலம் 2000 ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் அனுப்பலாம்.
இதற்கு தனிநபர்கள் ஆன்லைனில் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்தியா போஸ்ட் மூலம் ரிசர்வ் வங்கிக்கு ரூபாய் நோட்டுகளை அனுப்பலாம். புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அதன் ஆயுள்காலத்தைக் காட்டிலும் நீடிப்பதாகவும், பொது பரிவர்த்தனையில் மிகவும் குறைவாகப் பயன்படுத்தப்படுவதாலும் அந்த நோட்டைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி காரணம் கூறியது.
தனிநபர்கள் ஒரே சமயத்தில் ரூ.20000 மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி கிளைகளிலும் போஸ்ட் ஆபிஸ்களிலும் மாற்றிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications