பஞ்சாபில் அக்டோபர் 13 வரை கரண்ட் கட் தொடரும்.. தமிழகத்தினை மிரட்டும் நிலக்கரி பற்றாக்குறை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொருளாதார மந்த நிலை போய், கொரோனா வந்து, தற்போது இந்தியாவில் மின்வெட்டு பிரச்சனையானது மீண்டும் நிலக்கரி பற்றாக்குறையால் என்ன ஆகுமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. பல மாநிலங்களிலும் இதன் எதிரொலி ஏற்கனவே எதிரொலிக்க ஆரம்பித்துள்ள நிலையில், தமிழகத்தில் என்ன ஆகுமோ? என்ற கவலையும் இருந்து வருகின்றது.

மின் உற்பத்தி ஆலைகளுக்கு நிலக்கரி சப்ளையானது குறைந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் மின் வெட்டு வரலாமோ என்ற நிலையே இருந்து வருகின்றது.

குஜராத் தொழிற்சாலைகள் நவம்பர் முழுவதும் மூட திட்டம்.. என்ன பிரச்சனை..! குஜராத் தொழிற்சாலைகள் நவம்பர் முழுவதும் மூட திட்டம்.. என்ன பிரச்சனை..!

இதே பஞ்சாப் மாநிலத்தில் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம, கடுமையான நிலக்கரி பற்றாக்குறை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை

நிலக்கரி பற்றாக்குறை

நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினசரி மூன்று - நான்கு மணி நேரங்கள் மின் வெட்டு ஏற்படுகின்றது. இதனால் அக்டோபர் 13 வரையில் மின்வெட்டு நீடிக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இது தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில் நிறுவனங்களின் உற்பத்தி விகிதத்தினை பாதிக்க தொடங்கியுள்ளது.

50% மட்டுமே செயல்பாடு

50% மட்டுமே செயல்பாடு

ஏற்கனவே நிலவி வரும் மின் வெட்டு பிரச்சனைக்கு மத்தியில், பஞ்சாப்பில் மின் உற்பத்தி ஆலைகள் ஏற்கனவே நிலக்கரி பற்றாக்குறையால் 50% மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நிலக்கரி கையிருப்பும் குறைந்துள்ளது. தனியார் வசம் 1.5 நாட்கள் வரையில் தாங்கும் அளவுக்கு நிலக்கரி இருப்பு உள்ளதாகவும், இதே அரசு இடங்களில் 4 நாட்கள் தாங்கும் அளவுக்கு இருப்பதாகவும் அதிக்காரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று கூறினர்.

பல மாநிலங்களிலும் பற்றாக்குறை

பல மாநிலங்களிலும் பற்றாக்குறை

PSPCL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் வேணுபிரசாத் இது குறித்து கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள நிலக்கரி அடிப்படையிலான அனைத்து ஆலைகளிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களாக டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான் இருந்து வருகின்றது என்றும் கூறியுள்ளார்.

மின்சாரத்தினை விலைக்கு வாங்கும் நிலை

மின்சாரத்தினை விலைக்கு வாங்கும் நிலை

மேலும் PSPCL வேளாண் உள்ளிட்ட பல தேவைகளுக்கும் PSPCL அதிக விலை கொடுத்து, மின்சாரத்தினை வெளியில் இருந்து வாங்குவதாக தெரிவித்துள்ளார். PSPCL அதிகபட்சமாக கடந்த சனிக்கிழமையன்று 8788 மெகாவாட் மின்சாரத் தேவையினை பூர்த்தி செய்தது. இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு யூனிட் மின்சாரம் 11.60 ரூபாய் என்ற விகிதத்தில், 1800 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டது என்றும் கூறுகின்றார்.

மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

மின்சாரம் கொள்முதல் செய்து வரும் நிலையில், தேவைக்கும் விநியோகத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்காக, PSPCL அதிக சுமையை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில் 2 முதம் 3 மணி நேரம் வரையில் மின் வெட்டு இருக்கும் என்றும் கூறியுள்ளார். எனினும் தற்போது அரசு தலையீட்டின் காரணமாக தற்போது நிலைமை மேம்பட தொடங்கியுள்ளது. இந்த நிலையானது அக்டோபர் 15 முதல் சீரடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நுகர்வோர் சிக்கனமாக மின்சாரத்தினை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Power cuts remain in Punjab till October 13 due to Coal shortage: plants operating half capacity

Coal shortage latest updates.. Power cuts remain in Punjab till October 13 due to Coal shortage; plants operating half capacity
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X