பிரபல நகைச்சுவை நடிகரான பவர்ஸ்டார் சீனிவாசன் (Power Star Srinivasan arrest) மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர், அந்த படத்தில் நடித்த சந்தானத்துடன் இணைந்து செய்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதன்பிற்கு பல்வேறு படங்களில் நடத்தி வந்தார். தற்போது, அவர் 'பர்ஃபியூம்' என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இவர், டெல்லியில் தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.1,000 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. எனவே, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பவர்ஸ்டாரை கைது செய்துள்ளனர்.

கடந்த 2013இல் தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.1,000 கோடி கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக அவரிடம் இருந்து ரூ.5 கோடி பெற்றுள்ளார். பின்னர், பணத்தை பெற்றுக்கொண்ட பவர்ஸ்டார், கடன் எதுவும் வாங்கி தராமல் தொழிலதிபரை ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து, தொழிலதிபர் புகாரளித்த நிலையில், அப்போதே கைது செய்யப்பட்ட பவர்ஸ்டார் சீனிவாசன், இந்த வழக்கு தொடர்பாக பீகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜாமீனில் வெளிவந்த சீனிவாசன் மீது மேலும் பல மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதேபோன்று, பல்வேறு இடங்களில் பண மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், சென்னையில் கூட அவர் மீது 6 வழக்குகள் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற மாநிலங்களிலும் கடன் பெற்று தருவதாக கூறி காசோலை வழங்கி ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்குகளை பவர்ஸ்டார் சீனிவாசன் எதிர்கொண்டு வந்த நிலையில், இதில் டெல்லி தொழில் அதிபரை ஏமாற்றிய வழக்கும் டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பவர்ஸ்டார் சீனிவாசன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருந்தது. இருப்பினும், அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications